அன்ரியல் என்ஜின்(Unreal Engine) எபிக் விளையாட்டுக்கள் நிறுவனத்தால் 1998 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. முதலில் இது "முதல் நபர் சுடுபவர் (First Person Shooter)" விளையாட்டுக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது பல விதமான கணினி விளையாட்டுக்களை உருவாக்கப் பயன்படுகின்றது. தற்போது பயன்படுத்தப்படும் பொறிகளில் மிகவும் சிறந்தது எனப் பல வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.[1] பிரபல்யமான விளையாட்டு பொறிகளின் வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் மிகச்சிறந்த காட்சி விளைவுகளை உருவாக்க முடிவதால், கட்டிடக்கலை காட்சிப்படுத்தல்களின்போது பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு கணிவிளையாட்டை உருவாக்க நிரல்களை எழுத வேண்டியிருக்கும், ஆனால் அன்ரியலில் காட்சி நிரலாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூடிகேயில்(அன்ரியல் டிவலப்மன்ட் கிட்) இதற்கு உருவாக்குனர்கள் "கிஸ்மட்" எனப் பெயரிட்டனர்.அன்ரியல் என்ஜின் 4 இல் "ப்லூபிரின்ட்" என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நிரலாக்கம் பற்றி அறியாமல் கணினி விளையாட்டுக்களை உருவாக்க முடியும்.ஆனால் சிக்கலான விளையாட்டுக்களை உருவாக்கும்போது "சி பிளஸ் பிளஸ்"'(C++)' மொழியை பயன்படுத்த முடியும். முன்னைய வெளியீடுளில் (UDK, UE3 மற்றும் பழையவை) "அன்ரியல் ஸ்க்ரிப்ட்" எனும் மொழி இருந்தது. அன்ரியல் என்ஜின் 4 வெளியீட்டில் இது இல்லாது செய்யப்பட்டுள்ளது.
இதன் பயனர் இடைமுகம் மற்ற பொறிகளை போல் அல்லாது மிகவும் இலகுவாக காணப்படுகின்றது. மேலும், இதில் மிகவும் செயல்திறன் வாய்ந்த இயற்பியல் முறை காணப்படுகின்றது. அதனால் இதில் துணி, வெடிப்பு, ரிஜிட்பொடி போன்றவற்றை உருவகப்படுத்த முடியம். அத்தோடு இயற்பியல் உருவகப்படுத்தல்களை செய்ய முடியும்.
இந்த கணினி விளையாட்டு பொறியை இலவசமாக எவரும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உருவாக்குனர் வெளியிட்ட மென்பொருளினால் அவர்கள் $3000 (அமெரிக்க டொலர்) இலாபம் பெறும் வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் இலாபம் பெறும் நிறுவனம், இலாபத்தில் ஐந்து வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.[2]