அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°09′24″N 78°18′30″E / 11.156782°N 78.308358°E / 11.156782; 78.308358
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி
வகைதனியார் (கிறித்துவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்)
உருவாக்கம்1996
அமைவிடம்
எருமைப்பட்டி, நாமக்கல் மாவட்டம்
, ,
இணையதளம்[1]

அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி (Annai Mathammal Sheela Engineering College)[1] நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ளது. இது நாமக்கலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது 1996ல் துவங்கப்பட்டது. இது கொல்லிமலையின் பின்புலத்தில் நாமக்கல் துறையூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மறைந்த பழனியப்பா தேவசகாயம் மற்றும் மாதம்மாள் ஷீலாவால் துவங்கப்பட்டது. இது கிறித்துவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் அமைகிறது.

படிப்புகள்[தொகு]

இளநிலை:

  • கணிப்பொறியியல்
  • மின்னியல், தொலைத்தொடர்பியல்
  • மின்னணுவியல்
  • இயந்திரப் பொறியியல்
  • கட்டிடக் கலை
  • தகவல் தொழில்நுட்பம்

முதுநிலை:

  • எம் பி ஏ - முதுகலை வணிக நிர்வாகம்
  • எம் சி ஏ - கணினிப் பயன்பாடுகள்
  • எம்.இ. - கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல்.
  • எம்.இ. - பவர் மின்னணுவியல் & இயக்கிகள்
  • எம்.இ. - பிரயோக மின்னணுவியல்
  • எம்.இ. - எம்பெடட் சிஸ்டம்ஸ்
  • எம்.இ. - கேட் / கேம்
  • எம்.இ. - தொழில்துறை பாதுகாப்பு & பொறியியல்
  • எம்.இ. - கட்டமைப்பு பொறியியல்
  • எம். டெக்- தகவல் தொழில்நுட்பம்

வசதிகள்[தொகு]

  • நூலகம்

மாணவர்கள் நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகள், பயனுள்ள ஆன்லைன் ஜர்னல்ஸ், 87 தேசிய, 16 சர்வதேச மற்றும் 29 இதழ்கள்,13465 தொகுதிகள் மற்றும் 4273 தலைப்புகள், 725 குறுவட்டுகளை கொண்டுள்ளது.

  • வளாகத் தேர்வுகள்

மாணவர்கள் பயனுள்ள தற்குறிப்பு தயார் பயிற்சி மற்றும் நல்லொழுக்கத் திறன்கள் அபிவிருத்தி செய்ய தனியாக ஒரு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உள்ளது. [2]

  • விளையாட்டு அரங்கம்

கூடை பந்து, கரப்பந்தாட்டம், யோகா கிளப் போன்ற உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் விளையாட விசாலமான இடவசதிகள் உள்ளன. [3]

சான்றுகள்[தொகு]

  1. அன்னை மாதம்மாள் ஷீலா கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு http://dinamani.com/edition_coimbatore/article933726.ece
  2. அன்னை மாதம்மாள் ஷீலா கல்லூரியில் வளாகத் தேர்வு http://dinamani.com/edition_coimbatore/article936640.ece
  3. மண்டலங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது. http://dinamani.com/edition_dharmapuri/namakkal/2013/10/27/மண்டல-விளையாட்டுப்-போட்டிக/article1858191.ece

வெளியிணைப்புகள்[தொகு]

அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரியின் இணையதளம்