அன்னி மிஞிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்னி மிஞிலி என்பவள் சோசர் குடிமகள்.

இவள் வாழ்ந்த ஊர் அழுந்தை.

இந்த அழுந்தை இக்காலத்தில் தேரழுந்தூர் என்று வழங்கப்படுகிறது.

இவளது தந்தை ஆனிரை மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் சற்றே கண்ணயர்ந்துவிட்டான். அப்போது அவனது பசு ஒன்று அருகில் பயறு விளைந்திருந்த வயலில் நுழைந்து மேய்ந்துவிட்டது. ஒன்றுமொழிக் கோசர் மன்றத்தில் கூடிக், கண் அயர்ந்த குற்றத்துக்காக அவனது கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டனர். அன்னிமிஞிலி கோசரைப் பழிவாங்க உறுதி பூண்டாள். உண்ணாமலும், நீராடி உடை மாற்றாமலும் படிவம் மேற்கொண்டாள். திதியனிடம் முறையிட்டாள். திதியன் கொடுமைப் படுத்திய ஒன்றுமொழிக் கோசரைக் கொன்றான். இந்த மகிழ்ச்சியில் திளைத்த அன்னிமிஞிலி தன் அழுந்தூர்த் தெருவில் பெருமிதத்தோடு நடந்து சென்றாள்.[1]

காண்க[தொகு]

சான்று மேற்கோள்[தொகு]

  1. பரணர் அகம் 196, 262
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_மிஞிலி&oldid=2565937" இருந்து மீள்விக்கப்பட்டது