சங்ககாலத் தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால அரசர்கள் போரில் பிடிபட்ட அரசர்களைச் சிறையிலிட்டுத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.

மக்கள் மன்றம் வழங்கிய தண்டனை[தொகு]

  • சங்ககாலத்தில் கள்ளூர் மக்கள் மன்றம் பெண்ணைக் காதலித்துப் பழகியபின் இல்லையென்று மறுத்த குற்றம் செய்தவனை ஊர்மரத்திலே கட்டித் தலையில் சுண்ணாம்பு நீறு கொட்டித் தண்ணீர் ஊற்றி அவன் அழகை அழித்துத் தீர்ப்பு வழங்கித் தண்டித்திருக்கிறார்கள்
  • அன்னி மிஞிலியின் தந்தை மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் சோர்ந்திருந்தபோது அவனது மாடு அடுத்தவர் விளைச்சலை மேய்ந்துவிட்டது என்பதற்குத் தண்டனையாக மேய்த்தவனின் கண்ணையே தோண்டும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
  • வரைவின் மகளிர் தவறு செய்தால் அவர் தலையில் சுட்ட ஏழு செங்கற்களை ஏற்றி ஊரைச் சுற்றிக் கொண்டு வருவர். [1] குற்றம் சுமத்தப்பட்டு தலையில் சுட்டமண் செங்கல் ஏற்றிக் கொண்டுவரப்படாத பொதுமகளிர் மதுரையில் வாழ்ந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [2]

மேற்கோள்[தொகு]

  1. "மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" - சித்திராபதி கூற்று - மணிமேகலை - 18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  2. சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை - சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலத்_தண்டனை&oldid=2415234" இலிருந்து மீள்விக்கப்பட்டது