அன்னா பியோதோரோவ்னா வோல்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னா பியோதோரோவ்னா வோல்கோவா (Anna Feodorovna Volkova; இறப்பு: 1876) ஓர் உருசிய வேதியியலாளர் ஆவார். முக்கியமாக இவர் அமைடுகளுடன் பணிபுரிந்தார். 1860 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், செயின்ட் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் பொது சொற்பொழிவுகள் மூலம் வேதியியலில் கல்வி பயின்றார். உருசியாவில் வேதியியலாளராக பட்டம் பெற்ற முதல் பெண்மணி அண்ணா பியோதோரோவ்னா வோல்கோவா என அறியப்படுகிறது. உருசிய வேதியியல் கழகத்தின் முதல் பெண் உறுப்பினர், வேதியியல் படைப்பை வெளியிட்ட முதல் உருசியப் பெண், தனது சொந்த இரசாயன ஆராய்ச்சியை நவீன இரசாயன ஆய்வகம் மூலம் வெளியிட்ட முதல் பெண்மணி என்று பல சிறப்புகள் இவருக்கு உண்டு. .[1]

1869 ஆம் ஆண்டு முதல் இவர் அலெக்சாண்டர் நிக்கோலாயெவிச் ஏங்கல்கார்ட்டின் ஆய்வகத்தில் பணியாற்றினார். செயின்ட் பீட்டர்சுபர்க்கில் பெண் மாணவர்களுக்கான நடைமுறை படிப்புகளை திமீத்ரி மெண்டெலீவ் பொறுப்பில் நடத்தினார். 1870 ஆம் ஆண்டில், தூய ஆர்த்தோ தொலுயீன் சல்போனிக் அமிலம், இதன் அமில குளோரைடு மற்றும் அமைடையும் முதன்முதலாக தயாரித்தார். பாரா-கிரெசாலில் இருந்து நெகிழியாக்கியின் ஓர் அங்கமான பாரா டிரைகிரெசால் பாசுப்பேட்டையும் இவரே முதலில் தயாரித்தார். [2]

வெள்ளி கோளின் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]