அன்னமய்யா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
అన్నమయ్య నగర అభివృద్ధి సంస్థ | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 சனவரி 2019 |
வகை | நகர்ப்புற திட்டமிடல் நிறுவனம் |
ஆட்சி எல்லை | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையகம் | கடப்பா, ஆந்திரப் பிரதேசம் |
அன்னமய்யா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Annamayya Urban Development Authority) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்புற திட்டமிடல் நிறுவனம் ஆகும். 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச பெருநகரப் பகுதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2016 இன் கீழ் கடப்பாவை தலைமையகமாகக் கொண்டு இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.[1]
அதிகார வரம்பு
[தொகு]அன்னமய்யா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பு 12,780.26 சதுரகிலோமீட்டர் (4,934.49 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இப்பகுதியின் மக்கள் தொகை 18.39 லட்சம் ஆகும்.[2] கடப்பா மாவட்டத்தின் 41 மண்டலங்களில் உள்ள 520 கிராமங்கள் இந்த ஆணையத்திற்குள் அடங்கியுள்ளன. கீழே உள்ள அட்டவணை அன்னமய்யா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு உட்பட்ட நகரப் பகுதிகளை பட்டியலிடுகிறது.[3]
அதிகார வரம்பு | ||
---|---|---|
குடியிருப்பு வகை | பெயர் | மொத்தம் |
மாநகராட்சிகள் | கடப்பா | 1 |
நகராட்சிகள் | ராஜம்பேட், பாத்வெல், மைதுகூர், புரோட்டத்தூர், புலிவெந்துலா, ராயச்சோட்டி, ஜம்மலமடுகு, எர்ரகுண்ட்லா | 8 |
நகரப் பஞ்சாயத்து | கமலாபுரம் | 1 |
- ↑ Staff Reporter (2 January 2019). "Three new urban development authorities" (in Telugu). Eenadu இம் மூலத்தில் இருந்து 3 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103004904/http://epaper.eenadu.net/index.php?rt=email%2Fviewemail&a=MjAxOTAxMDJhXzAxNDEzNTAxMA%3D%3D&V=SW1hZ2U%3D. பார்த்த நாள்: 2 January 2019.
- ↑ Staff Reporter (2 January 2019). "అన్నమయ్య దిశా.. కడపకు కొత్త దశ" (in Telugu). Eenadu இம் மூலத்தில் இருந்து 3 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103004948/http://epaper.eenadu.net/index.php?rt=email/viewemail&a=MjAxOTAxMDJiXzAwMTExNTAwNQ==&V=SW1hZ2U=. பார்த்த நாள்: 2 January 2019.
- ↑ "Andhra Pradesh Metropolitan Region and Urban Development Authorities Act, 2016". பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.