அனிதா தேவி
![]() | விக்கிப்பீடியா:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 நிகழ்வுக்காக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் மேம்பாடு தேவைப்படலாம். கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் குறிப்பிடுங்கள். மாணவிகளுக்குத் தெரிவித்து மாற்ற ஏதுவாகும். தேவைப்படும் காலம்: 1 ஏப்ரல் 2021 வரை |
தனிநபர் தகவல் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குடியுரிமை | இந்தியர் | |||||||||||||||||
பிறப்பு | 1984 ஏப்ரல் 16 அரியானா , பல்வல் மாவட்டம் | |||||||||||||||||
பதக்கங்கள்
|
அனிதா தேவி (Anitha devi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி இவர் பிறந்தார். அரியானா மாநில காவல்துறையில் பணிபுரிந்து வரும் அனிதா தேவி தேசிய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
அனிதா தேவி அரியானா மாநிலத்திலுள்ள பல்வல் மாவட்டத்தில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். காவல்துறையில் சிறப்பு அனுமதி பெற்று, குருச்சேத்ரா நகரில் உள்ள குருகுல் என்ற பயிற்சி மையத்தில் அனிதா தேவி பயிற்சியை தொடங்கினார். அனிதாவின் தந்தை ஒரு மல்யுத்த வீர்ராவார். கணவர் தரம்பிர் குலியா அனிதா தேவியின் துப்பாக்கி சுடும் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.[1]
சாதனைகள்[தொகு]
2011 ஆம் ஆண்டு முதல் அனிதா தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறார்.[2]
- 2013 ஆம் ஆண்டு அனைத்திந்திய காவலர்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்ற பட்டம் கிடைத்தது.
- 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனிதா துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 2016 ஆம் ஆண்டு செருமனியின் அன்னோவர் நகரில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், இதே போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும், அனிதா தேவி அங்கம் வகித்தார்.[3] [4]