அனிதா குகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா குகா
சோ மந்தார் என்ற படத்தில் அனிதா குகா
பிறப்பு(1939-01-17)17 சனவரி 1939
இறப்பு20 சூன் 2007(2007-06-20) (அகவை 68)
செயற்பாட்டுக்
காலம்
1953–1989
வாழ்க்கைத்
துணை
மாணிக் தத்

அனிதா குகா ( Anita Guha: 17 ஜனவரி 1939 - 20 ஜூன் 2007) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் வழக்கமாக திரைப்படங்களில் புராணக் கதாபாத்திரங்களில் நடித்தார். ஜெய் சந்தோஷி மா (1975) என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் அறியப்பட்டார். முன்னதாக, சம்பூரண இராமாயணம் (1961) படத்தில் சீதையாக நடித்திருந்தார். இதைத்தவிர ஸ்ரீ ராம் பாரத் மிலாப் (1965) மற்றும் துளசி விவாக் (1971) , கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் (1959), சன்ஜோக் (1961). , பூர்ணிமா (1965), பியார் கி ரஹேன் (1959), கேட்வே ஆஃப் இந்தியா (1957), தேக் கபீரா ரோயா (1957) மற்றும் லுகோச்சூரி (1958) போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார்.

தொழில்[தொகு]

அனிதா, 1950களில் 15 வயதில் அழகுப் போட்டியாளராக மும்பைக்கு வந்தார்.[1] முதலில் டோங்கா-வாலி (1955) என்ற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். தேக் கபீரா ரோயா (1957), சாரதா (1957),[2] மற்றும் கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் போன்ற வெற்றிப் படங்களிலும் இவர் தோன்றினார். கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் படத்திற்காக இவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். இது இவரது தொழில் வாழ்க்கையின் ஒரே பரிந்துரையாகும்.[3] 1961 ஆம் ஆண்டில், பாபுபாய் மிஸ்திரியின் சம்பூர்ண இராமாயணத்தில் சீதையாக தோன்றினார். இது இவருக்கு புகழைத் தந்தது.[4]

ஆனாலும் ஜெய் சந்தோஷி மா (1975) திரைப்படத்தில் இவரது பாத்திரம் மேலும் இவருக்கு புகழைக் கொண்டு வந்தது.[5] அப்போது சந்தோசி மாதா அதிகம் அரியப்படாத தெய்வமாகவே இருந்தார். இத்திரைப்படத்தில் இவர் ஓர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இவரது காட்சிகள் 10-12 நாட்களில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது இவர் உண்ணாவிரதம் இருந்தார்.[6] குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் திரையரங்க வசூலில் சாதனைகளை முறியடித்தது. சந்தோசி மாதா பின்னர் பலராலும் அறியப்படும் தெய்வமாக மாறினார்.[7]

கவி காளிதாஸ் (1959), ஜெய் துவாரகாதேஷ் (1977) மற்றும் கிருஷ்ணா கிருஷ்ணா (1986) ஆகியவை இவர் நடித்த பிற புராண படங்களில் அடங்கும். புராணப் படங்கள் தவிர்த்து இவர் சங்கீத் சாம்ராட் தான்சென் (1962), கன் கன் மே பகவான் (1963) மற்றும் வீர் பீம்சென் (1964) போன்ற படங்களிலும் நடித்தார். ஆராதனா (1969) என்ற படத்தில் ராஜேஷ் கன்னாவின் வளர்ப்புத் தாயாக நடித்திருந்தார்..

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் நடிகர் மாணிக் தத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் பின்னர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, இவர் மும்பையில் தனியாக வசித்து வந்தார். அங்கு இவர் 20 ஜூன் 2007 அன்று குருதித்தேக்க இதயத் திறனிழப்பு காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Santoshi Maa Anita Guha dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 June 2007 இம் மூலத்தில் இருந்து 26 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126094712/http://articles.timesofindia.indiatimes.com/2007-06-20/news-interviews/27952627_1_films-role-actress. 
  2. "Anita Guha, 70s, actress – Entertainment News, Obituary, Media – Variety". Variety இம் மூலத்தில் இருந்து 9 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100709172816/http://www.variety.com/article/VR1117967653.html?categoryid=25&cs=1. 
  3. "1st Filmfare Awards 1953" (PDF). Archived from the original (PDF) on 12 June 2009. பார்க்கப்பட்ட நாள் 13 December 2007.
  4. "Anita Guha dead". The Hindu (Chennai, India). 20 June 2007 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125075156/http://www.hindu.com/thehindu/holnus/009200706201550.htm. 
  5. Kahlon, Sukhpreet. "Anita Guha, a different 'Maa' in Indian cinema – Death anniversary special". Cinestaan.com. Archived from the original on 25 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
  6. The Telegraph – Calcutta : etc பரணிடப்பட்டது 29 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம் The Telegraph (Kolkata)
  7. On playing Santoshi Ma பரணிடப்பட்டது 19 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம் Rediff.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_குகா&oldid=3920413" இலிருந்து மீள்விக்கப்பட்டது