அந்நோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்நோவா (unnova) என்பது ஒரு விண்மீன் தன் வாழ்நாளின் இறுதியாக தானாகவே வீழ்ச்சியடையும் போது நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். இவ்வீழ்ச்சியின் போது குறுமீன் வெடிப்பு அல்லது மீயொளிர் விண்மீன் வெடிப்பு[1] நிகழ்வுகளின் போது வெளிப்படும் ஆற்றலைப் போல பெரும் எண்ணிக்கையிலான துகள்கள் மற்றும் ஆற்றல் உமிழப்படுவதில்லை. ஆனால் மீயொளிர் விண்மீன் வெடிப்பு போலவே அந்நோவாவின் மையப்பகுதி ஒரு நொதுமி விண்மீன் அல்லது ஒரு கருந்துளையாக உருவாகிறது.[1][2] விண்மீனின் வெளிப்புற பகுதியில் இருக்கும் பருப்பொருள், ஒப்பீட்டளவில் மெதுவாக அந்நோவாவின் மையப்பகுதியில் விழுகிறது. இதனால் குறைந்த ஆற்றல் காம்மா கதிர் வீச்சு உமிழப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Catchpole, H (23 September 2008). "Looking for stars that vanish from the sky". 24 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Riddle of Black Holes". Through the Wormhole. 16 June 2010. No. 2, season 1.
  3. Lovegrove, E (20 October 2011). "The Case of the Disappearing Star: Un-novae and Ultra-long Gamma-ray Transients".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்நோவா&oldid=3585917" இருந்து மீள்விக்கப்பட்டது