நொதுமி விண்மீன்
ஒரு மிகப் பெரிய விண்மீன் ஈர்ப்பு சக்தியால் உருவான வீழ்ச்சியால் மீயொழிர் வெடிப்புக்கு உட்பட்டு மீதியாக உருவாகும் ஒரு விண்மீன் வகையே நொதுமி விண்மீன் ஆகும். இவ்வகை விண்மீன்கள் மீயொழிர் வெடிப்பில் இருந்து மீண்ட நொதுமிகளாலேயே உருவாக்கப்பட்டு உள்ளன. இவை மிகுந்த வெப்பமுடைய விண்மீன்களாகும். குவான்டம் கொள்கைக்கேற்ப இவ்வகை விண்மீன்கள் மென்மேலும் சுருக்கமடைய முடியாது. நொதுமி விண்மீன் சூரியனைப் போல ஒன்று தொடக்கம் இரண்டு மடங்கு திணிவைக் கொண்டாலும், இவ் விண்மீன் மிகவும் சிறியது. அதாவது புவியில் உள்ள சராசரி நகரத்தின் நீளத்தையே ஆரையாகக் கொண்டுள்ளது (12 km).
உருவாகும் விதம்[தொகு]
மீயொளிர் விண்மீன் வெடிப்பு ஒன்றின் போது மிகப்பெரும் விண்மீனின் உள்ளகம் ஈர்ப்பால் சுருக்கப்பட்டு நொதுமி விண்மீனாக மாற்றமடைகின்றது.
கட்டமைப்பு[தொகு]

துடிவிண்மீன்[தொகு]
மூலக்கட்டுரை - துடிவிண்மீன்

மிகவும் அடர்த்தி வாய்ந்த நொதுமி விண்மீன், மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. அவ்வாறு சுற்றும் போது இதன் ஒளி புவிக்கு விட்டுவிட்டு வரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு வரும் அலைகளே துடிப்பலைகள் எனப்படும். இது 4 நொடிகளுக்கு 3 துடிப்புகளை சீராக வெளியிடும்.[1]
கண்டுபிடிப்பு[தொகு]
இதை 1967ஆம் ஆண்டு அண்டனி மற்றும் பர்னல் என்ற இரு வானியலாலர்கள் கண்டறிந்தனர்.[2][3][4] இதற்கு முன் இத்துடிப்பலைகளை வேற்று கிரக வாசிகள் அனுப்பும் சிக்னல் என இதை கண்டுபிடிக்கும் வரை நம்பிக்கொண்டிருந்தனர்.
கண்டுபிடிப்பின் வரலாறு[தொகு]

1934ஆம் ஆண்டு வால்டர் பேட் என்பாரும் ஃப்ரிட்ஸ் சுவிக்கி என்பாரும் முதன்முதலில் நொதுமி விண்மீன் இருக்கக் கூடும் என முன்மொழிந்தனர். பின்னர் பல வகை தொலைக் காட்டிகள் மூலம் நொதுமி விண்மீன் அவதானிக்கப்பட்டது.
- ↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-76, பல்சார்ஸ், ISBN 978-8189936228.
- ↑ Pranab Ghosh, Rotation and accretion powered pulsars. World Scientific, 2007, p.2.
- ↑ M. S. Longair, Our evolving universe. CUP Archive, 1996, p.72.
- ↑ M. S. Longair, High energy astrophysics, Volume 2. Cambridge University Press, 1994, p.99.