அந்தோனிக்குட்டி அண்ணாவியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் என்பவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கிறித்தவக் கவிஞர் ஆவார். இவர் பிறந்த இடம் தூத்துக்குடி என்றும் மணப்பாடு என்ற கடலோர கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.


இயற்றிய நூல்கள்[தொகு]

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய நூல்கள் கீழ்வருவன:

  • பேரின்பக் காதல்
  • பாலத்தியானம்
  • பச்சாத்தாபம்
  • தன்மேற்சுமத்தல்
  • ஆபத்து பத்து
  • ஆசைப்பத்து
  • ஆராதனைப் பிரகாசம்
  • அருள்வாசகம்
  • ஞானத் திருப்புகழ்
  • திருப்புகழ்
  • ஆனந்த மஞ்சரி
  • அன்னையின் பிரலாப வண்ணம்
  • இயேசுநாதர்சுவாமி பாடுகள்மேல் பரணி
  • தேவமாதாவின் பேரில் கொச்சகக் கலிப்பா
  • இயேசுநாதர் பேரில் கொச்சகக் கலிப்பா

என்பன.

கவிதையில் வாழ்க்கையின் பிரதிபலிப்பு[தொகு]

அண்ணாவியாரின் வாழ்க்கை தொடக்கத்தில் நெறிபிறழ்ந்து இருந்தது என்பதையும் ஓர் அற்புத நிகழ்ச்சியால் மனமாற்றம் பெற்று இறைநெறியைச் சார்ந்து அருட்பாடல்கள் பலவற்றைப் புனைந்தார் என்பதையும் ஒரு பாடல்வழி அறிய முடிகிறது:

"தரத்தயை செய்வாய் - தரத்தயை செய்வாய் தரத்தயை செய்வாய்
இரக்கமுள்ள மாதாவே - இராசகுலக் கன்னிகையே
எங்கள் பேரிலுள்ள - அன்பினால் உமது
செங்கைமேவுதிரு - மைந்தனாரை
ஞான சொரூபியான நல்ல மகவைப் பாவ
ஈனன் தொட வெண்ணாதென்று எண்ணுகிறீரோ தாயே
ஏனை உயிரும் காக்கும் ஞானக்குழந்தை நல்
இரக்கப் புனலில் நன்றாய்க் குளித்து முழுகிப் பாவ
அழுக்கைத் துடைத்து மகா ஒழுக்கத்துடனே வந்தேன்"

நூல் ஆதாரம்[தொகு]