அந்தமான் தமிழர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்தமான் தமிழர் சங்கம் என்பது அந்தமான் தீவுகளில் வாழும் தமிழர்களின் ஒரு தமிழ் அமைப்பாகும்.[1] இவ்வமைப்பு 1951 ஆம் ஆண்டு போர்ட் பிளேரில் துவக்கப்பட்டது. சங்கம் துவக்கப்பட்ட 1951 முதல் அந்தமான் பாரதி விழா நடை பெற்றுவருகிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் தமிழ்ச்சங்கம் என்று இருக்க அந்தமான் தீவில் மட்டும் தான் தமிழர் சங்கம் என்ற பெயரில் உள்ளது சிறப்பாக கருதப்படுகிறது. சங்கம் துவக்கியதுமுதல் இலக்கியக் கூட்டங்கள், சொற்பொழிவுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் யாவும் நடத்தப்பட்டு வந்துள்ளன. அந்தமான் தமிழர் சங்கத்தை தலைமை இடமாகக் கொண்டு அந்தமானின் பிற உள்தீவுகளிலும் தமிழர் இருந்த இடமெல்லாம் தமிழர் அமைப்புகள் தோன்றியுள்ளன. இந்தத் தமிழர் அமைப்புகளில் பாரதி, பாரதி தாசன் விழா, பொங்கல் விழா, சித்திரை விழா எனப் பல விழாக்களும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்துள்ளன.[2] 1957ம் ஆண்டில் முதல் முதலாக அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என அந்தமான் தமிழர் படைப்புகளை ஒன்று திரட்டி சித்திரை விழா மலர் வெளியிட்டார்கள்

தீவில் தமிழ் வழிக்கல்விக்கு வழியில்லாத சூழல் நிலவியதால் அந்தமான் தமிழர் சங்க வளாகத்திலேயே தமிழ் குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்துள்ளனர்.அதன் பிறகு போராட்டங்கள் பல நடத்தி, உண்ணாவிரதங்கள் பல இருந்து, 1972 ஆம் கல்வி ஆண்டில் தீவுகளில் தமிழ் வழிக்கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.[3] இன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் தமிழ் இலக்கிய மன்றம், இலவச தமிழ் கற்ற்ல் மையம் இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழுத்தாளருக்கு திருக்குறள் செம்மல் விருது". தினமணி (செப்டம்பர், 26, 2012). பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  2. "வங்க கடலின் நடுவே அரக்கன் மலைக்காடுகளில் அகப்பட்ட தமிழர்கள்,… அந்தமான் தமிழர் சங்கம்". முல்லைமலர்.இன். பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.
  3. "அந்தமான் வாழ் தமிழர் நிலை". விடுதலை. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.