உள்ளடக்கத்துக்குச் செல்

அணுக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணுவியல் கொள்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேதியியலிலும் இயற்பியலிலும் அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory) என்பது பொருள்களின் இயல்பை விளக்கும் ஓர் அறிவியல் கொள்கை ஆகும். எல்லாப் பொருள்களையும் தொடர்ந்து சிறிய சிறிய கூறுகளாகப் பிரித்துக் கொண்டே இருக்க முடியும் என்று முன்னர் நிலவி வந்த கருத்துருவாக்கத்திற்கு எதிராக, பொருள்கள் அணு என்னும் தனித்தனி அலகுகளால் ஆனவை என்னும் கருத்தை அணுவியல் கொள்கை முன்வைக்கிறது. பழங் கிரேக்கத்தில் ஒரு தத்துவக் கருத்தாகத் தோன்றிய இக்கொள்கை, பிறகு 19-ஆம் நூற்றாண்டில் வேதியியல் துறையில் உண்டான பல கண்டுபிடிப்புகளால் அறிவியல் புலத்தினுள் நுழைந்தது. பொருள்கள் துகள்களால் ஆனதைப் போன்ற இயல்பைப் பெற்றிருப்பதை அக்கண்டுபிடிப்புகள் காட்டின.

"துளைக்கமுடியாத"[1] என்னும் பொருளைக் கொண்ட atomos என்னும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல் தான் அணு (atom). ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் மின்காந்தவியல், கதிரியக்கம் போன்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அணு என்பது அதற்கும் மேல் பிரிக்க முடியாத ஒன்றல்ல; உள் அணுக்கருத் துகள்களால், குறிப்பாக எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமி ஆகியவற்றால் ஆனவை என்பதைக் காட்டின. இவ்வாறு அணுவைப் பிரிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்ட அறிவியலாளர்கள், பிறகு துளைக்க முடியாத அணுவின் கூறுகளை அடிப்படைத் துகள்கள் என்று அழைக்கலாயினர். அறிவியலில், உள் அணுக்கருத் துகள் பற்றிய பிரிவு துகள் இயற்பியல் என்று அழைக்கப் படுகிறது. இப்புலத்தில் தான் பொருள்களின் உண்மையான அடிப்படை இயல்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்பப் படுகிறது.

டால்டனின் அணுக் கோட்பாடு

[தொகு]

ஜான் டால்டன் என்ற ஆங்கிலப் பள்ளி ஆசிரியர் இதுவரை கண்டறிந்த வேதிச்சேர்க்கை விதிகள் மற்றும் கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அணுக் கொள்கையினை வெளியிட்டார் அவை;

  1. ஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.
  2. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
  3. ஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்
  4. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்
  5. மாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்
  6. வேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Berryman, Sylvia, "Ancient Atomism", The Stanford Encyclopedia of Philosophy (Fall 2008 Edition), Edward N. Zalta (ed.), http://plato.stanford.edu/archives/fall2008/entries/atomism-ancient/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்_கோட்பாடு&oldid=3059174" இலிருந்து மீள்விக்கப்பட்டது