அணுக்கரு அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அணுக்கருவின் அளவு (Nuclear size) அதன் ஆரத்தினால் தரப்படும். அணுக்கருவின் ஆரம் 10^{-15} மீ முதல் 10^{-15} மீ வரை இருக்கும் என ஏர்னெஸ்ட் ரதர்போர்ட்டின் சிதறல் ஆய்வு எடுத்துக் காட்டியது. அணுக்கருவின் ஆரம் (R) அதன் திணிவு எண்ணில் (A) தங்கியுள்ளது. அது பின்வரும் எண்மானச் சமன்பாட்டினால் கொடுக்கப்படுகிறது:

R = r_0 A^{1/3}

இங்கு,

A = திணிவு எண் (புரோத்தன்களினதும் (Z) நியூத்திரன்களினதும் (N) மொத்த எண்ணிக்கை),
r_0 = 1.25 fm = 1.25 x 10^{-15} மீ.

மாறிலி r_0 ஆனது அணுக்கரு மாதிரிகளைப் பொறுத்து .2 பெர்மிகளினால் (fm) மாறக்கூடியது.

1 பெர்மி (fm) = 10^{-15} மீ

மேலும் கோளம் ஒன்றின் கனவளவு அதன் r^{3} இற்கு நேர் விகிதமாக இருப்பதால், மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் படி, அணுக்கருவின் கனவளவு அதன் நிறை எண் A இற்கு நேர்விகிதமாக உள்ளது. எனவே, அணுக்கரு அடர்த்தி அண்ணளவாக மாறிலியாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_அளவு&oldid=1350451" இருந்து மீள்விக்கப்பட்டது