உள்ளடக்கத்துக்குச் செல்

அணி ஒப்புமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரியல் இயற்கணிதத்தில், A, B ஆகிய இரு nxn அணிகள் ஒத்தவை (similar) எனில், பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவு செய்யும் ஒரு நேர்மாற்றத்தக்க அணி nxn அணி P காண முடியும்:

இரு வெவ்வேறு அடுக்கலங்களிலமைந்த ஒரே நேரியல் கோப்பை ஒத்த அணிகள் குறிக்கும்; P ஆனது அடுக்களம் மாற்ற அணியாக இருக்கும்.[1][2]

AP−1AP என்ற உருமாற்றமானது A அணியின் ஒத்த உருமாற்றம் அல்லது இணைவு (similarity transformation, conjugation) எனப்படும்.

விளக்க எடுத்துக்காட்டு

[தொகு]

நேரியல் உருமாற்றங்களை வரையறுக்கும்போது, அடுக்கள மாற்றத்தால் ஒரு உருமாற்றைத்தை எளிதாக்கலாம் என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, R3 இல் வரையறுக்கப்பட்ட சுழற்சியில் சுழல் அச்சானது ஆய அச்சுகளில் ஒன்றாக இல்லாவிட்டால், சுழற்சி அணியைக் காண்பது எளிதாக இருக்காது. சுழல் அச்சை z-அச்சோடு பொருத்தினால் சுழற்சி அணி பின்வருமாறு அமையும்:

- சுழற்கோணம்.

புது ஆய அச்சுகளில் சுழற்சி உருமாற்றம் பின்வருமாறு எழுதப்படும்:

இதில் x', y' இரண்டும் முறையே மூல மற்றும் உருமாற்றப்பட்ட திசையன்கள்.

பழைய அடுக்களத்தில் உருமாற்றம் பின்வருமாறு எழுதப்படும்: இதில் x, y மற்றும் உருமாற்ற அணி T மூன்றும் பழைய அடுக்களத்தில் உள்ளன. T அணியை எளியவடிவுக்கு மாற்றுவதற்கு அடுக்கள மாற்ற அணி P பயன்படுத்தப்படுகிறது. P அணியானது x, y இரண்டையும் முறையே ஆக மாற்றுகிறது:

.

மூல அடுக்கள உருமாற்றமானது எளிதாகக் காணக்கூடிய மூன்று அணிகளின் பெருக்கற்பலனாக உள்ளது. மூன்று எளிய நிலைகளில் செய்யப்படுகிறது:

  • புது அடுக்களத்துக்கு மாற்றல் (P)
  • எளிதாக்கப்பட்ட உருமாற்றம் செய்தல் (S)
  • மீண்டும் பழைய அடுக்களத்துக்கு மாற்றல் (P−1).

குறிப்புகள்

[தொகு]
  1. Beauregard, Raymond A.; Fraleigh, John B. (1973). A First Course In Linear Algebra: with Optional Introduction to Groups, Rings, and Fields. Boston: Houghton Mifflin Co. pp. 240–243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-14017-X.
  2. Bronson, Richard (1970), Matrix Methods: An Introduction, New York: Academic Press, pp. 176–178, LCCN 70097490

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணி_ஒப்புமை&oldid=3832808" இலிருந்து மீள்விக்கப்பட்டது