அட்லஸ் என்டர்டெயின்மென்ட்
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1995 |
தலைமையகம் | லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படம் தயாரித்தல் மற்றும் நிதி |
துணை நிறுவனங்கள் | அட்லஸ் கலைஞர் மொசைக் மீடியா குழு |
அட்லஸ் என்டர்டெயின்மென்ட் (Atlas Entertainment) என்பது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நிதி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது சார்லஸ் ரோவன், பாப் கேவல்லோ மற்றும் டான் ஸ்டீல் ஆகியோரால் 1995 இல் ஆரம்பிக்கட்டது.[1]
இந்த நிறுவனத்தின் மூலம் பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017), வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற பல திரைப்படங்களை இணைந்து தயாரித்துள்ளது.
வரலாறு
[தொகு]1990 ஆம் ஆண்டில் சார்லஸ் ரோவன் மற்றும் கூட்டாளர் பாப் கேவல்லோ[2] ஆகியோரால் 'ரோவன்/கேவல்லோ என்டர்டெயின்மென்ட்டை' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கட்டது. அதே நேரத்தில்சார்லஸ் ரோவனின் மனைவியான டான் ஸ்டீல் என்பவர் முன்பு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் 'ஸ்டீல் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை உருவாக்கி த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸுடன் சிறப்புப் படங்களைத் தயாரிக்க ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர்.[3] அதை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் அட்லஸ் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க ரோவன்/கேவல்லோ என்டர்டெயின்மென்ட்டை ஸ்டீல் பிக்சர்ஸ் உடன் இணைத்தனர். மேலும் இது டர்னர் பிக்சர்ஸ் உடன் ஒரு பிரத்யேக திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dawn Steel". orlandosentinel.com. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் January 24, 2015.
- ↑ Billboard (in ஆங்கிலம்). 2006-11-11.
- ↑ "Dawn Steel Lands Deal With Disney Co". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 1990-04-06. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
- ↑ Frook, John Evan (1994-03-02). "Turner boosts distrib plans with Steel deal". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.