அட்லஸ் அந்துப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்லஸ் அந்துப்பூச்சி
Attacus atlas qtl1.jpg
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: லெபிடோப்டீரா
குடும்பம்: சாடர்னீடே
பேரினம்: அட்டகஸ்
இனம்: அ. அட்லஸ்
இருசொற் பெயரீடு
அட்டகஸ் அட்லஸ்
(Linnaeus, 1758)

அட்லஸ் அந்துப்பூச்சிகள் (Attacus atlas) என்பவை அந்துப்பூச்சிகளில் ஒரு வகையாகும். இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்ட இவை தமிழ்நாட்டின் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதாக அறியப்படுகிறது.[1]

அந்துப்பூச்சிகளில் மிகப்பெரியது அட்லஸ் அந்துப்பூச்சி.[சான்று தேவை] இவை இந்தியாவின் இமயமலைப்பகுதி, சீனா, மலாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றன. இவற்றின் சிறகை விரித்து நிற்கும் போது அதில் அமைந்துள்ள காட்சியமைப்பு பார்ப்பதற்கு அட்லஸ் (உலக வரைபடம்) போன்று இருக்கும் என்பதால் இது அட்லஸ் மாத் (அந்துப்பூச்சி) எனப்பெயரிடப்பட்டது. இதை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க இயலாது. இதன் சிறகுகள் உலர்ந்த இலையைப்போன்று செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகின் நுனிப்பகுதியானது பாம்பின் தலைபோன்று உள்ளது. ஆகவே இதனை பாம்புத்தலை அந்துப்பூச்சி என சீன மக்கள் அழைக்கின்றனர். இவ்வாறான உடலமைப்பின் மூலம் தனது எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறது. இந்த அந்துப்பூச்சியானது 2 வாரங்கள் மட்டுமே உயிர் வாழக்கூடியது.

உலகின் மிகப்பெரிய அட்லஸ் அந்துப்பூச்சியானது ஏற்காட்டில், 2017 ஏப்ரல் மாதத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[2] சிறகுகள் உடைந்த நிலையில் ஒன்றும், ஆரோக்கியத்துடன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இறகை விரித்த நிலையில் 19 சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது. சிறகின் அகலம் 8 சென்டிமீட்டர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மிகப்பெரிய அந்துப்பூச்சிகள்: ஏற்காட்டில் வாழும் அதிசயம்". செய்தி. தினமலர். 13 ஏப்ரல் 2017. 2 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2 வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் அபூர்வமான அட்லஸ் அந்துப்பூச்சி ஏற்காட்டில் கண்டுபிடிப்பு". செய்தி. தினகரன். 2 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.