அடிச்சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானூந்தின் அடிச்சட்டம்

அடிச்சட்டம் (Chassis, Frame) (US: /ˈæsi/,[1] UK: /ˈʃæsi/;[2] என்பது கட்டுமானத்தையும், பயன்பாட்டில் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளையும் தாங்கும் ஒரு உள்கட்டமைப்பாகும். தானுந்தின் சக்கரம், பொறி ஆகியவற்றை தாங்கும் அடிபாகத்தில் உள்ள சட்டம் இதற்கு ஒரு உதாரணமாகும். பொதுவாக அடிச்சட்டம் அதிக வலு கொண்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அடிச்சட்டம்[தொகு]

மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும்.

பொதுவாக, மகிழுந்து (எஸ்யூவி), எல்.சி.வி (LCV) களில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் குறை கரி எஃகு உலோகத்தால் உருவாக்கபடுகிறது. இதன் தடிமன் 1.8 மில்லி மீட்டரிலிருந்து 5 மில்லி மீட்டர் வரை இருக்கும். இதன் எடையானது 200 கிலோ கிராமிலிருந்து 220 கிலோகிராம் வரை இருக்கக்கூடும். நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2 மீட்டர் வரையிலும் இருக்கும். நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை பக்கப் பகுதிகள் என்றும், இவற்றை குறுக்கு வாக்கில் இணைக்கக்கூடிய பாகத்தை குறுக்குப் பகுதிகள் என்றும் கூறுவர். பெரும்பாலும் இவற்றை இணைக்க அறையாணி, திருகாணியைவிட பற்றவைப்பு முறை வலிமையானது என்பதால் இம் முறையே பின்பற்றபடுகிறது. [3] [4]

அடிச்சட்டம்

அடிச்சட்டதின் குறுக்குப் பகுதிகள் ஆங்கில எழுத்து "சி" வடிவிலும் பக்கப் பகுதிகள் இரண்டு "சி" பாகங்களை இணைத்து பற்றவைப்பு செய்வதன் மூலம் செவ்வகமாகவும் வடிவமைக்கப்படுகிறது. அடிச்சட்டமானது, இலகுவாக ஒன்றிணைப்புச் செய்யவும், முன்சக்கரத்திற்கும் பின்சக்கரத்திற்கும் இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ, ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது. பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான அடிச்சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  1. முறையான வடிவம்
  2. கூட்டு வடிவம் (CREW)
  3. நீட்சிக்கப்பட்ட வடிவம்

அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை[தொகு]

இடித்துக்கொள்ளுதல்[தொகு]

பாகங்களை ஒன்றிணைக்கும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது அறையாணி, திருகாணி, பற்றுவைப்பு மணிகளுடன் (WELD BEAD) இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.

ஆரம் தேர்ந்தெடுப்பது[தொகு]

இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோல் அமையவேண்டும்.

ஆரம் தேர்ந்தெடுப்பது

பாகங்களை இணைத்தல்[தொகு]

இரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுள்ளான இடைவெளி 0.25 மி.மீ (வடிவமைப்பை பொருத்து இடைவெளியின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில் இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பாகங்களை இணைக்கும்போது
பாகங்களை இணைக்கும்போது

குறுக்குப் பகுதிகளின் உயரம் கணக்கிடுதல்[தொகு]

குறுக்குப் பகுதி மற்றும் பக்கப்பகுதி இணையும் இடத்தில் குறுக்குப் பகுதியின் உயரம் பக்கப்பகுதி உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதித் தன்மை அதிகரிக்கும் (இது வடிவமைப்பைப் பொருத்ததாகும்)

குறுக்கு வெட்டுத்தோற்றம்

துல்லியம் பாதுகாத்தல்[தொகு]

இரண்டு பாகங்களை, மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும் (எ.கா--துளை இடுதல், உட்பிடி அமைதல்).

வளைவுப்பகுதில் ஆரம்[தொகு]

தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2டி (டி= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.

வளைவுகள் வடிவமைப்பு[தொகு]

வளைவுகளின் வடிவமைப்பு
வளைவுகளின் வடிவமைப்பு

அபிவிருத்தி வடிவத்தின் போது விளிம்புப் பிணையானது மற்ற இடங்களில் குறுக்கீடு செய்யாதது போல் இருக்கவேண்டும் விளிம்புப் பிணையின் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( டி- தகட்டின் தடிமன்) நீளம் இருந்தால் போதுமானது (இது நீளம், தேவையை பொறுத்தது). மொத்த எடையில், நிகர எடையானது 70% மேல் இருக்கவேண்டும். முடிந்த அளவு கழிவு எடையை குறைக்கவேண்டும்

நிகர எடை / மொத்த எடை=(1.5 / 2)*100 =75%

நீர்த் தேங்குதல்[தொகு]

சில பாகங்களை (S/MBR, C/MBR, BRKT) வடிவமைக்கும் போது நீர் தேங்காதவாறு அமைத்தல் அவசியம். இதன் மூலம் துருப்பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

பொதுவான வடிவமைப்பு[தொகு]

பாகங்கள் வடிவமைக்கும் போது, எல்லா இடங்களிலும் பயன்படும்படி பொதுவான வடிவமாக இருத்தல் அவசியம் (செலவை குறைக்கும் ) தவிர்க்கமுடியாத காரணம் இருப்பின் மாறுபட்ட வடிவ பாகங்களை வடிவமைக்கலாம்.

கூர்மையான வடிவமைப்பு[தொகு]

பாகங்கள் வடிவமைக்கும் போது கூர்மையான முனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், கூர்மையான முனைகள் ஒன்றிணைப்பு செய்யும் போது காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கூர்மையான வடிவமைப்பு

பற்றவைப்பு[தொகு]

பற்றவைப்பு பந்தம்
பற்றவைப்பு செய்யும் போது
பற்றவைப்பு ஆணி பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை

பற்றவைப்பு செய்யும் போது பற்றவைப்பு பந்தமானது மற்ற பாகங்குளுடன் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

  • சில விதிமுறைகள் (இவைக் கட்டாயம் அல்ல. தேவைக்கேற்ப மாறுபடலாம்)

S/MBRஇன் ஆரம் பகுதியில் பற்றவைப்புச் செய்வதை தவிர்க்கலாம். ஒருவேளை வலிமை குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டால், ஆரம் பகுதிலும் பற்றவைப்புச் செய்யலாம். பற்றவைப்பின் நீளம் 30 மில்லி மீட்டருக்கு குறைவில்லாமல் இருக்குமாறு பாகங்கள் வடிவமைக்கவேண்டும் (வலிமையை அதிகரிக்க வேண்டிய பட்சத்தில் மாறுதலுக்குட்பட்டது)

பகுப்பாய்வு[தொகு]

அடிச்சட்டம் முழுவதுமாக உருவாக்கப்பட்ட பிறகு கீழ்காணும் பல்வேறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

  1. இயற்கை அதிர்வு (NATURAL VIBRATION)
  2. தகைவு (STRESS ANALYSIS)
  3. நிலைமத் திருப்புத்திறன் (MOMENT OF INERTIA)
  4. பக்கவாட்டு பகுப்பாய்வு (LATERAL ANALYSIS)
  5. மாறாநிலை ஆய்வு (STATIC ANALYSIS)
  6. முறுக்குகின்ற பகுப்பாய்வு (TORSIONAL ANALYSIS)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிச்சட்டம்&oldid=3800334" இருந்து மீள்விக்கப்பட்டது