உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சூம் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சூம் சோப்ரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஞ்சூம் சோப்ரா
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 17 1995 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 29 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 21 2009 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 12 116 4
ஓட்டங்கள் 548 2706 65
மட்டையாட்ட சராசரி 30.44 33.40 32.50
100கள்/50கள் 0/4 1/17 0/0
அதியுயர் ஓட்டம் 98 100 37*
வீசிய பந்துகள் 258 601
வீழ்த்தல்கள் 2 9
பந்துவீச்சு சராசரி 44.00 46.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/9 2/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 31/– 1/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 18 2009

அஞ்சூம் சோப்ரா (Anjum Chopra) இந்திய மகளிர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற வீராங்கனை ஆவார்.[1] இவர் புது தில்லியில் பிறந்தவர். இவருடைய தாத்தா வேத் பிரகாஷ் தடகள வீரராகவும், மட்டைப்பந்தாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார். இவருடைய தந்தை கிஷன்பால் கோல்ப் விளையாட்டு வீரராகவும், சகோதரர் நிர்வண் துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தனர். மட்டைப்பந்து விளையாட்டில் விளையாடத் தொடங்கியது முதலே இடது கை அதிரடி துடுப்பாட்டக்காரராகவும், வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். பள்ளி, கல்லூரி, மாவட்டம் என எல்லா அணிகளிலும் இடம் பெற்ற இவருக்கு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தில்லி அணியில் இடம் கிடைத்தது. 1995 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து சென்ற போது, ஒரு நாள் தொடருக்கான அணியில் அஞ்சும் சோப்ராவின் பெயரும் இடம் பெற்றது. அப்போது இவருக்கு வயது 17 தான்.[2] 1995 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகளிர் அணி இந்தியா வந்த போது தேர்வு துடுப்பாட்ட அணியிலும் அஞ்சூம் சோப்ராவுக்கு இடம் கிடைத்தது. மொத்தம் 12 தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய அஞ்சும் சோப்ரா, 4 அரை சதம் உட்பட 548 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 116 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2009 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணியின் உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். 1995 ஆம் ஆண்டில் தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை இவர் இந்திய மகளிர் துடுப்பாட்டத்தில் தனது பங்கினை அளித்துள்ளார். 2000, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதையும், 2014 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதையும் பெற்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.indiatvnews.com/sports/cricket/four-female-commentators-in-ipl-8-who-are-former-cricketers-16764.html
  2. https://www.icc-cricket.com/news/421025
  3. "Anjum receives Padma Shri award", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சூம்_சோப்ரா&oldid=2765997" இலிருந்து மீள்விக்கப்பட்டது