அசோலா
அசோலா புதைப்படிவ காலம்:Maastrichtian-Holocene | |
---|---|
Azolla caroliniana | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Azolla |
மாதிரி இனம் | |
A. filiculoides[1] | |
Species | |
See list below |
அசோலா (Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுகிறது.
அமைப்பு
[தொகு]மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.
சத்துக்கள்
[தொகு]இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும் , தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும் , வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
பயன்கள்
[தொகு]- அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
- அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
- நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
- அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 In: Encyclopédie Méthodique, Botanique 1(1): 343. 1783. "Name – Azolla Lam". Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசோரி): Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் February 19, 2010.
Annotation: a sp. nov. reference for Azolla filiculoides
Type Specimens HT: Azolla filiculoides - ↑ "Amazing azolla acquires an alternative 'avatar'". 20 September 2007 – via www.thehindu.com.