அசிட்டைல் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டைல் நைட்ரேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டிக் நைட்ரிக் நீரிலி
வேறு பெயர்கள்
அசிட்டைல் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
591-09-3
ChemSpider 11069
InChI
  • InChI=1S/C2H3NO4/c1-2(4)7-3(5)6/h1H3
    Key: JCZMXVGQBBATMY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11557
SMILES
  • CC(=O)O[N+](=O)[O-]
பண்புகள்
C2H3NO4
வாய்ப்பாட்டு எடை 105.05
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.24 கி/செமீ3 (15 °செ)
கொதிநிலை 10 டார் அழுத்தத்தில் 22 °செ
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும் தன்மை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசிட்டைல் நைட்ரேட்டு (Acetyl nitrate) என்பது CH3C(O)ONO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நைட்ரிக் மற்றும் அசிட்டிக் அமிலங்களின் கலவையின் நீரிலி எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நிறமற்ற வெடிக்கும் தன்மை உள்ள திரவமாகும். ஈரப்பதமான காற்றுடன் வெண்புகையைத் தருகிறது.

தொகுப்பு முறை மற்றும் வினைகள்[தொகு]

இச்சேர்மமானது அசிட்டிக் நீரிலியுடன் டைநைட்ரசன்பென்டாக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் இவற்றின் வினைகளின் மூலம் தயாரிக்கப்படுகிறது:

(CH3CO)2O + HNO3 → CH3C(O)ONO2 + CH3CO2H

இச்சேர்மமானது காற்றுடன் வினைபுரிந்து, முந்தைய வினையின் பின்னோக்கு வினையாக, அசிட்டிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக நீராற்பகுக்கப்படுகிறது. மாற்றாக நைட்ரிக் அமிலமானது கீட்டீனுடன் சேர்க்கை விளைபொருளைத் தருகிறது.

இச்சேர்மமானது நைட்ரோஏற்றம் மற்றும் நைட்ராபகுப்பு வினைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[1] இச்சேர்மமானது அசிட்டைல் குளோரைடின் பண்பினையொத்து, அமீன்களை அசிட்டைலேற்றம் செய்கிறது.:

2 RNH2 + CH3C(O)ONO2 → [RNH3]NO3 + CH3C(O)NHR

மேற்கோள்கள்[தொகு]

  1. Louw, Robert "Acetyl nitrate" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis 2001, 1-2. எஆசு:10.1002/047084289X.ra032 10.1002/047084289X.ra032
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டைல்_நைட்ரேட்டு&oldid=3907617" இலிருந்து மீள்விக்கப்பட்டது