உள்ளடக்கத்துக்குச் செல்

அசாம் அல்வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் அல்வாசு
Azzam Alwash
பிறப்பு1958 (அகவை 65–66)
தேசியம்ஈராக்கியர்
பணிநீரியக்கப் பொறியாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2013)

அசாம் அல்வாசு (Azzam Alwash) ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒரு நீரியக்க பொறியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். சதாம் உசேன் ஆட்சியின் போது அழிக்கப்பட்ட தெற்கு ஈராக்கில் உப்பு சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான இவரது முயற்சிகளுக்காக, குறிப்பாக 2013 ஆம் ஆண்டு அல்வாசுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. [1] அரபு நாட்டின் சமதர்மக் கட்சியான ஆளும் பா ஆத் கட்சியில் சேர மறுத்த காரணத்தால் அல்வாசு 1978 ஆம் ஆண்டிலேயே தனது 20 ஆவது வயதில் ஈராக்கை விட்டு வெளியேறினார். அப்போது இவர் பொறியியல் பட்டப்படிப்பில் பாதியில் படித்துக் கொண்டிருந்தார். கலிபோர்னியாவின் லாசு ஏஞ்சல்சு நகருக்கு குடிபெயர்ந்து தனது படிப்பைத் தொடர்ந்தார்.

ஈராக் போரின் தொடக்கமான 2003 படையெடுப்பைத் தொடர்ந்து அல்வாசு ஈராக்கிற்குத் திரும்பினார். தெற்கு ஈராக்கின் உப்புச் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஓர் இலாப நோக்கமற்ற நேச்சர் ஈராக் என்ற அமைப்பை நிறுவினார். [2]

துருக்கி-சிரியா எல்லையில் 23 அணைகள் கொண்ட ஒரு விரிவான சங்கிலித் திட்டம் நிறைவடைந்தால், ஈராக்கில் நீரின் ஓட்டம் வெகுவாக குறையும் அபாயமுள்ளது. எனவே மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்த அல்வாசு ஈராக்கின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த புதிய அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடி வருகிகிறார்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prize Recipient, 2013 Asia. Azzam Alwash". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
  2. Vidal, John (April 15, 2013). "Azzam Alwash wins Goldman prize: 'Saddam's marsh drainage project was war by other means'". தி கார்டியன். https://www.theguardian.com/environment/2013/apr/15/azzam-alwash-goldman-prize. பார்த்த நாள்: 28 July 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_அல்வாசு&oldid=3316005" இலிருந்து மீள்விக்கப்பட்டது