உள்ளடக்கத்துக்குச் செல்

அசய் பாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசய் வி. பாட் (Ajay V. Bhatt)
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில்
பிறப்பு1957
இந்தியா[1]
இருப்பிடம்ஓரிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1]
இனம்இந்தியர்
கல்விஇளங்கலை, மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகம், பரோடாவிலும் [1]
முதுகலை, நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் [2]
பணிஇன்டெல் நிறுவனத்தின் மேடை வாடிக்கையாளர் தலைமை நிபுனர்[2]

அசய் வி. பாட்[3] இந்திய அமெரிக்க கணினி நிபுணர். இவர் யுஎசுபி என்னும் அகிலத் தொடர் பாட்டை, ஏஜிபி, பிசிஐ எக்சுப்ரசு உள்ளிட்ட அதிநவீன கருவிகளை உருவாக்க உதவிய நிபுணராவார், அதுமட்டுமின்றி மேடை-ஆற்றல் மேலாண்மை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர். இவருடைய கண்டுபிடிப்பான அகிலத் தொடர் பாட்டை விளம்பரத்தில் இவரைப் போன்று சுனில் நார்க்கர் நடித்திருந்தார்.[4]

இன்டெலும் அசய் பாட்டும்

[தொகு]

1990-ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் இணைந்த அசய், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க காப்புரிமைகளை வைத்திருக்கிறார். 1998, 2003 மற்றும் 2004 ஆண்டுகளில் அசய் பல்வேறு அமெரிக்க மற்றும் ஆசிய முதன்மை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அக்டோபர் 9, 2009, தி டுனைட் சோ வித் கேனன் ஓ'ப்ரைன் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய கருத்துகள் ஒளிபரப்பப்பட்டது.[5]

பாராட்டுகளும் விருதுகளும்

[தொகு]
  • சூலை 2010-ல் வெளியான சிக்யூ (GQ) இதழில் "மிகவும் செல்வாக்கான 50 உலகளாவிய இந்தியர்கள்!" பட்டியலில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
  • ஏப்ரல் 2013-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்குவதற்கான ஆசிய விருது இலண்டனில் வழங்கப்பட்டது.[6]
  • 2013-ம் ஆண்டு, ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தால் ஐரோப்பியரில்லாதவர்கள் பட்டியலில் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது.[7]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 Jacklet, Ben (September 2009). "On the edge". Oregon Business. Archived from the original on 16 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் September 23, 2009.
  2. "Intel Fellow – Ajay V. Bhatt". July 22, 2009. Archived from the original on நவம்பர் 4, 2009. பார்க்கப்பட்ட நாள் September 23, 2009.
  3. இன்டெல் நிறுவனத்தில் அசய் பாட்
  4. Graves, Mark (May 9, 2009). "Intel ad campaign remakes researchers into rock stars". தி ஒரிகேனியன். பார்க்கப்பட்ட நாள் September 23, 2009.
  5. http://www.engadget.com/2009/10/10/conan-obrien-talks-to-the-co-creator-of-usb-on-the-tonight-show/
  6. Winners at the Asian Awards
  7. Invention: the USB (அகிலத் தொடர் பாட்டை)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசய் பாட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசய்_பாட்&oldid=3855960" இலிருந்து மீள்விக்கப்பட்டது