அங்கேரியப் புரட்சி, 1956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹங்கேரியப் புரட்சி, 1956
Hungarian Revolution of 1956
பனிப்போர் பகுதி

ஜங்கேரிய கொடியுடன் சோவியத் கவச வாகனம்
நாள் 23 அக்டோபர் – 10 நவம்பர் 1956
இடம் ஹங்கேரி
புரட்சி அடக்கப்பட்டது
பிரிவினர்
சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்
அங்கேரி ஹங்கேரி
உள்ளூர் ஹங்கேரிய துணை இராணுவத்தினர்
தளபதிகள், தலைவர்கள்
சோவியத் ஒன்றியம் இவான் கோனெவ் பல்வேறு துணை இராணுவத் தலைவர்கள்
பலம்
150,000 படையினர்,
6,000 தாங்கிகள்
எண்ணிக்கை இல்லை
இழப்புகள்
(சோவியத் இழப்புகள் மட்டும்)
722 இறப்பு
1,251 காயம்[1]
2,500 இறப்பு(அண்.)
13,000 காயம் (அண்.)[2]

ஹங்கேரியப் புரட்சி, 1956 (Hungarian Revolution of 1956) என்பது அன்றைய ஹங்கேரியின் ஸ்டாலின் சார்பு கம்யூனிச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியைக் குறிக்கும். இது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் ஆரம்பித்து நவம்பர் 10 ஆம் நாள் முடிவுக்கு வந்தது[3].

ஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் புடாபெஸ்ட்டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது.

புரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் சோவியத் படைகளுடனும் போரிட்டனர். சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள் மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு வார்சா உடன்படிக்கையில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது.

சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, நவம்பர் 4 ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு நவம்பர் 10 ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 2,500 இற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 700 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். 1957 ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.

இப்புரட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. பனிப்போரின் முடிவில் 1989 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Györkei, Jenõ; Kirov, Alexandr; Horvath, Miklos (1999). Soviet Military Intervention in Hungary, 1956. New York: Central European University Press. பக். 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:63911636X. 
  2. UN General Assembly Special Committee on the Problem of Hungary (1957) Chapter V footnote 8PDF (1.47 MiB)
  3. (see U.S. Department of State background on Hungary)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரியப்_புரட்சி,_1956&oldid=3373132" இலிருந்து மீள்விக்கப்பட்டது