அங்குட் அருங்காட்சியகம், பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அங்குட் அருங்காட்சியகம், பத்து
நிறுவப்பட்டது{{{established}}}
அமைவிடம்{{{location}}}


அங்குட் அருங்காட்சியகம் (Museum Angkut), இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் உள்ள பத்து என்னுடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். பத்து, கொத்தா பத்து என்றும் அழைக்கப்படுகிறது. காவி பதுக் மலையின் ஒரு பகுதியான பாண்டர்மேன் மலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் ஒரு போக்குவரத்து அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரிய போக்குவரத்து முதல் நவீன போக்குவரத்து வரையிலான காலத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட சேகரிப்புகள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.[1] இந்த அருங்காட்சியகம் 3.8 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இவ்விடம் 13 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அங்கு போக்குவரத்து கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

பிரிவுகள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனதன் பின்புலத்தில் ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து அமெரிக்கா வரையிலான கட்டிட மாதிரிகள் பின்னணியாக, அழகாக அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய மண்டலத்தைச் சேர்ந்த 1800-1900 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த பிரஞ்சு பாணியில் அமைந்த பல்வேறு வகையான விண்டேஜ் ஐரோப்பிய கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த அனைத்து வகையான போக்குவரத்து மாதிரிகளும் அங்குட் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[3]

இங்கு விண்டேஜ் கார்கள் உள்ளன. மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேகரிப்புகளான டுசுக்சிமின்சார கார் இங்கு உள்ளது. அது முன்னாள் இந்தோனேஷியாவின் முன்னாள் அமைச்சரும் ஜாவா பாஸ் குழு நிறுவனத்தின் உரிமையாளருமான தலன் இஸ்கான் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. மகேடன் என்னுமிடத்தில் அமைந்துள்ள லாவு மலையின் சரிவுகளில் மேற்கெள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது அது விபத்திற்குள்ளானது.[4] இந்த அருங்காட்சியகத்தில், பிரதான அருங்காட்சியக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஒரு விமான சிமுலேட்டர் என்ற போக்குவரத்து வாகனமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[5]

அங்குட் அருங்காட்சியகம் அங்கட் ஜவா திமூர் பார்க் குழுமம் என்ற நிறுவனத்தாருக்குச் சொந்தமானது ஆகும். அந்த நிறுவனத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, இதில் பத்து ரகசிய மிருகக்காட்சி சாலை, பத்து இரவு அருமைக்காட்சி (Batu Night Spectacular), சுற்றுச்சூழல் பசுமை பூங்கா மற்றும் வனவிலங்கு அருங்காட்சியகம் ஆகிய பிரிவுகள் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகம் 9 மார்ச் 2014 ஆம் நாளன்று நிறுவப்பட்டது.[6]

சிறப்பு[தொகு]

9 மார்ச் 2014 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்ட அங்குட் அருங்காட்சியகம், போக்குவரத்தை முக்கியமான நோக்காகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள முதல் அருங்காட்சியகம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இந்தோனேசியா மட்டுமன்றி உலகின் பிற நாடுகளிலும் போக்குவரத்துத் துறையில் ஏற்படுகின்ற பலவிதமான மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் நோக்கிலும், அதனைப் பாராட்டும் விதத்திலும் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும். இந்த அருங்காட்சியகத்தில் போக்குவரத்து தொடர்பான பல கூறுகளையும், கலைப்பொருள்களையும், வாகனச் சேகரிப்புகளையும் பார்வையாளர்கள் பார்வையிடலாம். அவை பல காலத்தைச் சேர்ந்தவையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[7]

அமைவிடம்[தொகு]

இந்த அருஙகாட்சியகம் ஜேஎல், டெருசன் சுல்தான் அகங்க் எண்.2, நகாக்லிக், கெக், கோடா பத்து, ஜாவா, தைமூர் 65314, இந்தோனேசியா என்னும் முகவரியில் அமைந்துள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அங்குட் அருங்காட்சியகத்தைப் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி உண்டு.[7]

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]