மின் தானுந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

டெஸ்லா ரோட்ஸ்டர், 2008 இல் வெளியிடப்படும் இவற்றின் முதல் 650 தானுந்துகள் லித்தியம்-அயன் மின்கலங்களைப் பாவித்து 220 மைல்கள் செல்லக்கூடியன.
மின் தானுந்து (Electric car) என்பது எரிபொருளுக்கு பதிலாக மின் ஆற்றலைப் பயன்படுத்தும் தானுந்து ஆகும். மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்பட்டு மின்னோடி கொண்டு அதை இயக்க ஆற்றலாக மாற்றி மின் தானுந்து பயன்படுத்துகின்றது. இவற்றை நிர்வகிக்க இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுதியும் உண்டு. இதில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் மீண்டும் மின்னேற்றம் செய்யப்படக்கூடிவை.
தற்போதைய சூழலில் மின் தானுந்துகள் விலை அதிகமானவை. ஆனால் எரி பொருள் விலை அதிகரிப்பு, சூழல் மாசடைதல் பிரச்சினை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காரணங்கள் எதிர்காலத்தில் கூடிய மின் தானுந்து பயன்பாட்டை ஏதுவாக்கும். மின் தானுந்து எரிபொருள் தானுந்து போல மாசடைந்த புகையை வெளியேற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.