அங்கிதா தியானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கிதா தியானி (Ankita Dhyani) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் நடுத்தர தூரம் மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடுகிறார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான இந்தியத் தடகள அணியில் இவர் இடம் பெற்றார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

உத்தரகண்டம் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள மரோதா கிராமம் அங்கிதாவின் கிராமமாகும். கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ள தனது கிராமத்தில் இராணுவத் தேர்வுகளுக்குப் பயிற்சியெடுக்கும் பெரிய பையன்களுடன் சேர்ந்து அங்கிதா பயிற்சிக்காக ஓடினார். [2]

தொழில்[தொகு]

  • 2023: மே மாதம், தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றார். [3]
  • 2021: சனவரியில், பஞ்சாபின் சங்ரூரில் நடந்த கூட்டமைப்பு கோப்பை சிறார் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள வெற்றியாளர் போட்டியில் 1500 மீ மற்றும் 5000 மீ இரண்டிலும் தங்கம் வென்றார். [4]
  • 2021: குவகாத்தியில் நடந்த இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் 1500மீ மற்றும் 5000மீ இரண்டிலும் தங்கம் வென்றார். [5] 5000 மீ ஓட்டத்தில் இவர் 16:21.19 வினாடிகள் கடந்து, தேசிய சாதனையை உருவாக்கி, சுனிதா ராணி ஏற்படுத்திய 16:21.59 நிமிடங்கள் சாதனையை அழித்தார். [2] [6]
  • 2021: ஆகத்து மாதத்தில் கென்யாவின் நைரோபியில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக வெற்றியாளர் போட்டியில் 1500மீ மற்றும் 5000மீ போட்டிகளில் பங்கேற்றார். [7]
  • 2018: ஆந்திரப் பிரதேசத்தின் விசயவாடாவில் நடந்த இளையோர் தேசிய போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
  • 2019: ராஞ்சியில் நடந்த இளையோர் தேசிய போட்டியில் 1500 மீ. போட்டியில் வெற்றி பெற்றார்.
  • 2019: புனேவில் நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் 1500 மீ மற்றும் 5000 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
  • 2020: கவுகாத்தியில் நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் 1500மீ மற்றும் 5000மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Full list of Indian athletes for Asian Games 2023". 2023-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
  2. 2.0 2.1 "No turning back: Ankita Dhyani's mastery at improbable chases makes her unbeatable" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02."No turning back: Ankita Dhyani's mastery at improbable chases makes her unbeatable". ESPN. 2021-02-08. Retrieved 2023-10-02.
  3. "अंकिता ध्यानी ने थाईलैंड एशियन एथलेटिक्स के लिए किया क्वालीफाई" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
  4. "Ankita Dhyani wins two medals in U-20 games". https://timesofindia.indiatimes.com/city/dehradun/ankita-dhyani-wins-two-medals-in-u-20-games/articleshow/84929639.cms. 
  5. "Track closed due to Covid, Olympic aspirant trains on farms & roads". https://timesofindia.indiatimes.com/city/dehradun/track-closed-due-to-covid-olympic-aspirant-trains-on-farms-roads-dodging-people-cattle-potholes/articleshow/83645209.cms. 
  6. "Ahead Of Olympic Qualifier, Sprinter Forced To Train On Farms And Roads" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
  7. "Olympic ambitions – the Indian endurance project making tracks in Bhopal | FEATURE | World Athletics". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிதா_தியானி&oldid=3870872" இலிருந்து மீள்விக்கப்பட்டது