அக்ரம் கதூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்ரம் கதூன் (Akram Khatoon பிறப்பு; 26 செப்டம்பர் 1937, அஜ்மீர் ) பாக்கித்தானைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளர் ஆவார். 1989 இல், இவர் முதல் மகளிர் வங்கி லிமிடெட்டின் நிறுவனர் தலைவரானார், இவர் 2004 வரை அந்தப் பதவியில் இருந்தார். [1] இந்தப் பதவியில் இருந்ததன் மூலம் இவர் நாட்டின் முதல் பெண் வங்கித் தலைவரானார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கதூன் பிரித்தானிய இந்தியாவின் அஜ்மீரில், 26 செப்டம்பர் 1937 அன்று முஹம்மது ஷாபி மற்றும் ஹசீனா பேகம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [3] ஷாஃபி பாக்கித்தான் இரயில்வே துறையில் பணிபுரிந்தார். [4] கதூனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர் இந்தியாவின் அஜ்மீரில் ஒரு மறைப் பணியாளர் பள்ளியில் பயின்றார். [3] இவர் நான்காம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவருடைய பெற்றோர் 1947 இல் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தனர். இந்தியப் பிரிவினைக்குப்பிறகு இவரது குடும்பம் லாகூரில் குடியேறியபோது, லாகூர் பாசறைப் பகுதியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கதூன் சேர்க்கப்பட்டார். இவர் லாகூர் மகளிர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினைப் பெற்றார் மற்றும் 1958 இல் லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரி மூலம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கதூன் கல்வியில் சிறந்து விளங்கினார். இவர் வலைப்பந்து, கைப்பந்து, உயரம் தாண்டுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் விவாதங்கள், பேச்சு மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற பிற விளையாட்டுகளில் பங்கேற்றார். கராச்சியின் டெய்லி ஜங் என்ற வார இதழில் இவருடைய ஒரு சுயசரிதை வெளியிடப்பட்டது. இவளுடைய நண்பர்கள் வற்புறுத்தினாலும், புத்தகங்களுக்கான வாசகர்கள் குறைந்து வருவதாக இவர் நம்பியதால், சுயசரிதை எழுதுவதாக முடிவு செய்தார். இவருடைய சகோதரிகள் திருமணமாகி இலண்டனில் வசிக்கிறார்கள். தனது பெற்றோரைப் பராமரிப்பதற்காக திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். [3]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

1990 ஆம் ஆண்டின் சிறந்த பெண் விருது பெற்றார்.[3] முதல் இஸ்லாமாபாத்தின் குறுநிதி வங்கி இயக்குநர்கள் குழுவில் இருந்தார்.

பாக்கித்தான் பெண்கள் பெண்கள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார்.

சுவிட்சர்லாந்தின் பல்கலைக்கழக பெண்கள் சர்வதேச கூட்டமைப்பின் சந்தைப்படுத்தல் மற்றும் நிதி திரட்டும் குழுவின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

பாக்கித்தான் வர்த்தக மற்றும் தொழில்முறை பெண்கள் கூட்டமைப்பின் மூத்த ஆலோசகராகத் தேர்வானார்.

சிந்து மூத்த குடிமக்கள் குழுமத்தின் துணைத் தலைவராக ஆனார்.

கராச்சியின் ஜின்னா மகளிர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்வானார்.

SIUT மற்றும் APWA ஆகியன இவரது பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக இவரது பெயரில் செயற்கைக்கோள் ஊடுபிரித்தல் மையத்தை நிறுவியது.[5] [6] [7] [8] வொண்டர் வுமன் ஆஃப் பாக்கித்தான் விருதினை 2017 ஆம் ஆண்டில் பெற்றார்.[3] வங்கித் துறையில் இவரது செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து 60 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றார்.

பெண் கல்விக்கு பங்களிப்பு[தொகு]

கதூன் ஜின்னா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அதிபராக பணியாற்றினார். இவர் இப்போது ஜின்னா பெண்கள் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழுவில் வாழ்நாள் மூத்த உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் இவர் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. Vol 86, issue 3 July–September 2019, Journal of the Institute of Bankers Pakistan, Retrieved 6 December 2020.
  2. "Finance Professionals". MizLink Pakistan. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Wonder Women of Pakistan". www.wonderwomenpakistan.com. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Daily Jang Urdu News | Pakistan News | Latest News - Breaking News". jang.com.pk. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Health Care: SIUT and APWA set up a dialysis centre". The Express Tribune (in ஆங்கிலம்). 2012-01-21. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Dialysis centre established". www.thenews.com.pk (in ஆங்கிலம்). 2021-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. Newspaper, the (2012-01-25). "First satellite dialysis centre of SIUT opened". DAWN.COM (in ஆங்கிலம்). 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  8. medrev. "Dialysis centre established – Medical Review" (in ஆங்கிலம்). 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரம்_கதூன்&oldid=3352995" இருந்து மீள்விக்கப்பட்டது