அக்யூலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்யூலா (Aquila), என்பது தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு இணைய சேவையை அளிப்பதற்காக முகநூல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராத பரீட்சார்த்த நிலையில் இருக்கக்கூடிய சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா வானூர்தியின் பெயராகும். முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இதனை முன்னெடுத்திருக்கிறார். விண்ணில் பறந்தபடியே தடையில்லா இணையதள சேவையை (Wi-fi hot spot) வழங்கும் சக்தி படைத்தது.[1][2]

இந்த அக்யூலா ஆளில்லாத விமானத்தை முகநூல் நிறுவனம் வெள்ளோட்டம் விட்டுள்ளது. 2016 டிசம்பரில் இதன் ஓட்டம் நடத்தப்பட்டாலும் அந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் அந்த சிக்கலுக்கு தீர்வு கண்ட பின்னர் அக்யூலா சூரிய ஆற்றல் விமானத்தை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் சோதனை செய்து பார்த்திருக்கிறது. போயிங் விமானத்தை விட மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்ட இந்த ஆளில்லா விமானம் 3 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றதுடன், ஒன்றே முக்கால் மணி நேரம் வானிலேயே உலா வந்தது. நொடிக்கு 20 ஜிபி இணையவேகத்தில் 13 கி.மீ தூரத்துக்கு இணைய சேவையை வழங்கும் பணியை சோதித்து வெற்றி பெற்றுள்ளது.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்யூலா&oldid=2724439" இருந்து மீள்விக்கப்பட்டது