உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கீலியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சு நாட்டின் முசி பாப்ரி-யில் அருங்காட்சியகத்தில் உள்ள பிரெஞ்ச் ஓவியர் பிரான்சிஸ் லியோன் பெனௌவ்வில் (1821–1859) வரைந்த அக்கீலியசின் பெருங்கோபம் என்கிற ஓவியம்

கிரேக்க தொன்மவியலில் அக்கீலியஸ் (Ancient Greek: Ἀχιλλεύς, Akhilleus, pronounced [akʰillěu̯s]) என்பவர் ட்ரோஜன் சண்டையில் தலைமை தாங்கி நடத்திய ஒரு கிரேக்க கதாநாயகன் ஆவார். கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ அக்கீலீசை திராய்க்கு எதிரான போரில் பங்குகொண்டவர்களிலேயே ஆண்மை நிறைந்தவனாக உருவகிக்கிறார். பின்னர் வந்த பழ மரபுக்கதைகளில் அக்கீலியஸ் தனது குதிகால் தவிர உடலில் எந்த பகுதியிலும் ஊறுவிளைவிக்க இயலாத ஒருவராக வர்ணிக்கபட்டார். இவரை குதிக்காலில் அடித்தால் இறந்துபோவார் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவரால் இவர் கொல்லப்பட்டார்.[1] இதன் காரணமாக தான் இப்பொழுதும் ஒரு மனிதனின் பலவீனத்தை குறிக்க இவரது குதிகால் எடுத்துகாட்டாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவத்துறையில் குதிகாலில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட சவ்வு சம்பந்தப்பட்ட பாதிப்பிற்கு இவரது பெயராலேயே வழங்கபடுகிறது.[2][3][4]

பெயர்க்காரணம்

[தொகு]

அக்கீலியசின் பெயர் பின்வருமாறு பிரித்து ஆராயப்படுகிறது அதாவது துக்கம் என்று பொருள் தரும் ἄχος (ஆக்கொஸ்) வார்த்தை மற்றும் மக்கள் அல்லது பழங்குடி அல்லது தேசம் மற்றும் சிலவேறு வித பொருள் தரும் λαός (லாவோஸ்-என்பது ஒரு பழம்பெரும் தேசம்) என்ற வார்த்தையும் இணைத்து இவரது பெயரிடபட்டிருக்கலாம் என கருதபடுகிறது.

திரோஜன் சண்டையில் அக்கீலியஸ்

[தொகு]

இலியட் என்பவர் எழுதிய காவியத்தில் முதல் இரு வரிகள்
μῆνιν ἄειδε θεὰ Πηληϊάδεω Ἀχιλῆος
οὐλομένην, ἣ μυρί' Ἀχαιοῖς ἄλγε' ἔθηκεν,
அதாவது
பீலியஸ்ஸின் மகன் ஆகிய அக்கீலியஸ்-ன் பெருங்கோபத்தை பாடு தேவதையே
கோபசாபத்தினால் கிரேக்கர்களுக்கு பெரும் அழிவினை கொண்டு வந்தவன்.
இலியட் காவியப்படி (16-ஆம் புத்தகம்) அக்கீலியஸ் ஐம்பது கப்பல்களில் ஒரு கப்பலுக்கு ஐம்பது படைவீரர்கள் வீதம் ட்ராய்-நகருக்கு வந்திறங்கியதாக தெரிவிக்கிறார். மேலும் அக்கீலியஸ் மேநேஸ்தியாஸ், யூடோராஸ், பெய்சாண்டர், பீனிக்ஸ், மற்றும் அல்சிமேடன் என்கிற ஐந்து படைத்தலைவர்களை நியமித்தாரென்றும் அவர்கள் ஒவொருவரும் ஐநூறு வீரர்களை வழிநடத்தினர் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

டெலிபியுஸ்

[தொகு]

கிரேக்கர்கள் ட்ரோஜன் போருக்கு பயணப்பட்டபொழுது டெலிபியுஸ் என்கிற மன்னன் ஆண்ட மைசியா என்கிற நாட்டில் தற்செயலாக தங்க நேர்ந்த பொழுது டெலிபியுஸூக்கும் அக்கிலீயஸூக்கும் இடையே போர் மூண்டது. இதில் அக்கீலியஸ் இதில் ஆறாத படுகாயம் பெற்ற டெலிபியஸை தோற்கடித்தார். இதன்பின்னர் இந்த காயத்தை ஆற்ற உன்னை காயபடுத்தியவனாலேயே மட்டும் தான் முடியும் என்று டெலிபியஸ் அசரீரி கேட்டார். பின்னர் இந்த அசரீரியின் வழிகாட்டுதலின் படி அரகோஸூக்கு பயணம் செய்து அக்கீலியஸை கோரி தனது காயம் ஆறபெற்றார். பின்னர் இதன் நன்றிகடனாக இவரே அக்கீலீயஸூக்கு அவரது ட்ராய் நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டியாகவும் அமைந்தார்.

திரோய்லூஸ்

[தொகு]

திரோய்லூஸ் என்பவன் திரோஜனின் இளவரசன் ஆவான். பேரரசன் பிரியமின் ஆளுகையின் கீழிருந்த இளவயது அரசனும் மற்றும் பிரியமின் மனைவியான ஹெகுபாவின் ஐந்து நேரடி வாரிசுகளில் இளையவரும் இவரே. சிப்ரியாவின் (அக்கீலியஸின் பெருங்கோபத்திற்கு முற்பட்ட வாழ்க்கையை பிரதானமாக கூறும் காவியம்) கூற்றுப்படி. அக்கீலியஸின் ஆட்கள் தங்களது தாயகம் திரும்ப நினைத்தனர். ஆனால் அவர்கள அக்கீலியஸால் நிர்பந்திக்கப்பட்டு போரில் ஈடுபட்டனர். இவர்கள் தான் பின்னாளில் எயிநீஸ் கோட்டையை தாக்கி அழித்தனர். மேலும் திரோய்லூஸையும் கொன்றனர். ஆனால் பின்வந்த கதையில் திரோய்லூஸ் அக்கீலியஸால் எதிர்பாராத விதமாக கொல்லபட்டான் என்று கூறுகிறது. இளவயதுடையவனாக இருந்த பொழுதும் திரோஜன் போரில் பங்குபெற்ற சிறந்த படைத்தலைவர்களில் இவனும் ஒருவன்.

மரணம்

[தொகு]
கோர்ப்ஃபுவில் உள்ள அக்கீலியஸ் கோர்ப்ஃபு அக்கீலியன் நந்தவனத்தில் குதிகாலில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழக்கும் காட்சி இங்கு சிலையாக

அக்கீலியஸ் திரோஜன் போரில் தனது நண்பன் பேட்ராகுலஸை கொன்றதற்காக திராய் இளவரசன் ஹெக்டரை கொன்று தனது பழி தீர்த்துகொண்டான். அப்போரில் இறந்த ஹெக்டரின் உயிரற்ற உடலை தனது தேரின் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டே திராய் நகரினை வலம் வந்தான். பின்னாளில் திரோஜன்கள் போரில் தொற்ற பின்பு திராயின் இளைய இளவரசன் பாரிஸ் பின்னிருந்து எய்த அம்பு அக்கீலியஸின் குதிகாலில் பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அக்கிலீஸ்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
  2. Epigraphical database gives 476 matches for Ἀχιλ-.The earliest ones: Corinth 7th c. BC, Delphi 530 BC, Attica and Elis 5th c. BC.
  3. Scholia to the Iliad, 1.1.
  4. Leonard Palmer (1963). The Interpretation of Mycenaean Greek Texts. Oxford: Clarendon Press. p. 79.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கீலியஸ்&oldid=3751981" இலிருந்து மீள்விக்கப்பட்டது