அக்கனாபுரம்

ஆள்கூறுகள்: 17°09′49″N 80°08′24″E / 17.163699°N 80.140067°E / 17.163699; 80.140067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கனாபுரம்
கிராமம்
அக்கனாபுரம் is located in தமிழ் நாடு
அக்கனாபுரம்
அக்கனாபுரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°09′49″N 80°08′24″E / 17.163699°N 80.140067°E / 17.163699; 80.140067
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர் மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி வகை
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்141 m (463 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்531[1]
மொழிகள்
 • அலுவலக மொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு04562
அருகிலுள்ள நகரம்திருவில்லிபுத்தூர்

அக்கனாபுரம் (Akkanapuram) தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அக்கனாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூராகும். இந்த கிராமமானது அக்கனாபுரம் மற்றும் அக்கனாபுரம் காலனி ஆகிய இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. இக்கிராமானது ஸ்ரீவில்லிப்புத்தூர் (21 கி.மீ), பள்ளபட்டி (27 கி.மீ), விருதுநகர் (28 கி.மீ), சிவகாசி (29 கி.மீ) மற்றும் மதுரை விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் மறவர், நாயக்கர், பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். [2]

வரலாறு[தொகு]

நாயக்கர்களின் காலத்தில், அந்த கிராமத்தை திருமால் நாயக்கர் மன்னரின் அரசிகளில் ஒருவரான அக்கம்மாள் என்பாருக்கு வழங்கப்பட்டது. எனவே அந்தக் கிராமத்திற்கு அக்கம்மாள்புரம் என்று பெயரிடப்பட்டது, பின்னர் அப்பெயரானது மருவி அதன் தற்போதைய பெயரான அக்கனாபுரம் என அழைக்கப்படுகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கனாபுரம்&oldid=3487449" இருந்து மீள்விக்கப்பட்டது