அகுஸ்டோ ரொவ பாஸ்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகுஸ்டோ ரொவ பாஸ்டோ (Spanish:Augusto Roa Bastos)(ஜூன் 12, 1917 - ஏப்ரல் 26, 2005) பரகுவை நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். தமது பதின்ம வயதுகளில் பராகுவே, பொலிவியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற சாக்கோ போரில் பங்கெடுத்தவர்[1]. பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக தமது பணியைத் தொடங்கி வசனகர்த்தாவாகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய யோயி சுப்பிரிமோ ( Yo el supremo ) என்ற சிக்கலான கதைக்களம் கொண்ட நாவல் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் 1989-யில் ஸ்பானிய மொழியில் மிகவும் கௌரவமான இலக்கிய விருது என அறியப்படும் பிரமியோ மிகுத்தே சர்வாந்தீஸ் (Premio Miguel de Cervantes) என்ற விருதையும் அவர் பெற்றார். யோயி சுப்பிரிமோ நாவலில் அகுஸ்டா 1814-யிலிருந்து 1840 வரையில் பரகுவையை ஆட்சி செய்த கொடுங்கோலன் யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியாவின் பேச்சு மொழியையும் சிந்தனையையும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.  

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுஸ்டோ_ரொவ_பாஸ்டோ&oldid=1906290" இருந்து மீள்விக்கப்பட்டது