உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திருநாயகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிலத்திருநாயகி
Akila Thirunayaki
தனிநபர் தகவல்
முழு பெயர்அகிலத்திருநாயகி சிறீசேயானந்தபவன்
தேசியம்இலங்கைத் தமிழர்
விளையாட்டு
நாடுஇலங்கை
விளையாட்டுAthletics
நிகழ்வு(கள்)400மீ, 800மீ, 1500மீ, 5000மீ
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இலங்கை
ஆசிய முதுநிலைத் தடகள வாகை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2023 பிலிப்பீன்சு 1500மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2023 பிலிப்பீன்சு 5000மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2023 பிலிப்பீன்சு 800மீ

அகிலத்திருநாயகி (பிறப்பு: அண். 1952) என்பவர் இலங்கையைச் சேர்ந்த தடகள வீராங்கனையும், இளைப்பாறிய சிறைச்சாலை அதிகாரியும் ஆவார். இவர் 2023 நவம்பரில் பிலிப்பீன்சில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆசிய முதுநிலைத் தடகளப் போட்டியில் 3 பதக்கங்களை வென்றார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அகிலத்திருநாயகி ஓர் எளிய பின்னணியைக் கொண்ட குடும்பத்தில், முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையில் பிறந்தார்.[4]

சாதனைகள்

[தொகு]

பிலிப்பீன்சில் நடைபெற்ற 2023 ஆசிய முதுநிலைத் தடகள வாகைப் போட்டியில் இலங்கையின் சார்பில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.[5] 71 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியதால், இவர் பதக்க வெற்றிக்காக பெரிதும் பாராட்டப்பட்டார். பெண்களுக்கான 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார், தொடர்ந்து பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் பங்குகொண்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.[6] 2023 ஆசிய முதுநிலை தடகள வாகையின் போது பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[7] களத்தில் தனது எதிராளிகளுக்கு எதிராக வெறுங்காலுடன் ஓடி பதக்கங்களை வென்றதற்காகவும் இவர் பாராட்டப்பட்டார்.[8]

அகிலத்திருநாயகி அவர்களுடைய இந்த மகத்தான சாதனையானது பெரும் பேசுபொருளாக இலங்கையில் மாறியது. இலங்கையில் குறிப்பாகப் பெரும்பாலான சிங்கள மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டார்.[9] அத்துடன் இவர் தனது சொந்த ஊரான முல்லைத்தீவுக்கும் பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற முல்லைத்தீவின் 72 வயதான அகிலத்திருநாயகி !, வீரகேசரி, 22 நவம்பர் 2023
  2. "71 year old woman from Mullaitivu, secures Two Gold Medals in Philippines Athletics Tournament". Hiru News (in ஆங்கிலம்). Retrieved 2023-11-22.
  3. "சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள் - தமிழ்வின்". Tamilwin. Retrieved 2023-11-22.
  4. Azarudeen, Mohamed (2023-11-22). "பிலிப்பைன்ஸில் சாதித்த இலங்கையின் 71 வயது வீராங்கனை". ThePapare.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-11-22.
  5. Nazahim, Kadhija (2023-11-22). "71-year-old Sri Lankan wins three medals in Philippines". ThePapare.com. Retrieved 2023-11-22.
  6. Abeykoon, Gayan (2023-11-20). "Septuagenarian does Lanka proud in Masters Athletics Championships". DailyNews. Retrieved 2023-11-22.
  7. "Remarkable Achievement: 71-Year-Old Mullaitivu Resident Clinches Gold at Masters Athletics Championships in the Philippines". asianmirror.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-11-22.
  8. "Golden Glory: 71-Year-Old Eelam Tamil's win defies barriers in the Philippines | Tamil Guardian". www.tamilguardian.com. Retrieved 2023-11-22.
  9. சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள், தமிழ்வின்
  10. அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகி, தமிழ்மிரர், 22 நவம்பர் 2023
  11. 71-year-old Sri Lankan wins three medals in Philippines, The Prepare, 22 நவம்பர் 2023
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலத்திருநாயகி&oldid=4218542" இலிருந்து மீள்விக்கப்பட்டது