அகாடியா, குசராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகடியா அல்லது அங்கடியா ((Akadiaor Ankadia)என்பது சவுராட்டிரா தீவகத்தில் உள்ள ஓர் ஊராகும். இது முன்னாள் ராஜ்புத்திர குட்டி சமத்தானமாகும்.

ஊர்[தொகு]

அகடியா (அல்லது அங்கடியா) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்தின் அம்ரேலி மாவட்டத்தின் அம்ரேலி வட்டத்தில் அமைந்துள்ளது. இது பாப்ராவிலிருந்து வடகிழக்கே இருபது மைல் தொலைவிலும் , கேரி ஆற்றின் வடக்குக் கரையில் பத்லியாவிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

வரலாறு.[தொகு]

கோகல்வார் பிராந்தில் உள்ள சமத்தானம் சவ்தா ராஜ்புத்திரத் தலைவர்களால் ஆளப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் போது இது கிழக்கு கத்தியவார்குடியேற்ற முகமையின் பொறுப்பில் இருந்தது.

1901இல் 102 மக்கள் தொகை கொண்ட ஒரே கிராமத்தை மட்டுமே உள்ளடக்கிய இது, 1,250 ரூபாய் மாநில வருவாயை ஈட்டியது (1803 - 044).

இது பிரித்தானியர் காலத்தில் பாப்ரா தானாவின் கீழ் ஒரு தனி கப்பம் செலுத்தும் மாநிலமாக இருந்தது. ஆளும் கராசியர்கள் சவ்தா ராஜபுத்திரர்கள் ஆவர் , சவுராட்டிராவில் இது மட்டுமே விடுதலையான சவ்தா ஆட்சியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகளும் தகவல் வாயில்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாடியா,_குசராத்&oldid=3799791" இலிருந்து மீள்விக்கப்பட்டது