அகாடியா
அகாடியா (Acadia,பிரெஞ்சு மொழி: Acadie) வட அமெரிக்காவின் வடமேற்குப்பகுதியிலிருந்த புதிய பிரான்சின் குடியேற்றப் பகுதியாகும். இதில் கியூபெக்கின் கிழக்குப் பகுதி, கடல்சார் மாநிலங்கள், தற்கால மேய்ன் முதல் கென்னபெக் ஆறு வரையான பகுதிகள் அடங்கியிருந்தன.[1] 17வது, 18வது நூற்றாண்டுகளில் அகாடியாவின் தென்கோடி குடியேற்றங்களாக கென்னபெக் ஆற்றங்கரையிலிருந்த நோர்ரிட்சுவொக்கும் பெனோப்சுகாட் ஆற்றின் இறுதியிலிருந்த காஸ்டீனும் இருந்தன.[2] பிரான்சிய அரசின் வரையறுப்பின்படி இதன் எல்லைகள் அத்திலாந்திக்கு கடற்கரையில் 40வது வடக்கு நிலநேர்க்கோட்டு வளையத்திலிருந்து 46வது நிலநேர்கோட்டு வளையம் வரையானது. பின்னர் இப்பகுதி பிரித்தானிய குடியேற்றங்களாக ஆனது; பின்னர் கனடிய மாகாணங்களாகவும் அமெரிக்க மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. அகாடியாவில் வாபானக்கி கூட்டமைப்பு மக்களும் பிரான்சிலிருந்து வந்த குடியேறிகளும் வாழ்ந்தனர். இவ்விரு இனத்தவர்களும் ஒருவருக்குள் திருமணம் புரிந்து கொண்டனர். இவர்கள் மெதீசு எனப்பட்டனர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ William Williamson. The history of the state of Maine. Vol. 2. 1832. p. 27; p. 266 (La Corne declares such to Lawrence in 1750); p. 293
- ↑ Griffiths, E. From Migrant to Acadian. McGill-Queen's University Press. 2005. p.61; John Reid. International Region of the Northeast. In Buckner, Campbell, and Frank (eds). The Acadiensis Reader: Volume One: Atlantic Canada Before Confederation. 1998. p. 40; Villebon, p. 121[தொடர்பிழந்த இணைப்பு]