அகச் சமயம்
Appearance
அகச் சமயம் என்பது சைவச் சித்தாந்தத்தின் பதி, பசு, பாசம் கொள்கையை ஏற்றுக் கொண்ட சமயங்களாகும். எனினும் இவை முக்தி நிலை விளக்கத்தில் மாறுபட்ட கொள்கையுடவை. இந்த அகச் சமயங்கள் ஆறு என்று உமாபதி சிவாசாரியார் எழுதியுள்ள சங்கற்ப நிராகரணம் எனும் சைவசித்தாந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
அவையாவன:
- பாடாணவாத சைவம்
- பேதவாத சைவம்
- சிவசமவாத சைவம்
- சிவசங்கிராந்தவாத சைவம்
- ஈசுவர அவிகாரவாத சைவம்
- சிவாத்துவித சைவம்