அஃகுப்பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் இலத்தீன் மொழி நூலில் உள்ள சொற்களின் சுருக்க வடிவம்

அஃகுப்பெயர் அல்லது சுருக்கக் குறியீடு அல்லது சுருக்கம் (abbreviation) (இலத்தீன் மொழியில் brevis என்தபதற்கு short எனப்பொருள் ஆகும்.[1]) சுருக்கக் குறியீடு என்பது, ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.[2][3]ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் சுருக்கக் குறியீடுகள் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது. தமிழில் எடுத்துக்காட்டு என்பதற்கு எ.கா என்ற சுருக்கக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக சில தமிழ் மொழி நூல்களில், சொற்களும் அதற்குரிய சுருக்கக் குறியீடுகளும், நூலின் துவக்கத்தில் அல்லது முடிவில் வழங்கியிருப்பர். இதனை முதலில் படித்து, மனதில் இருத்தி நூலைப் படித்தால், நூலில் உள்ள சுருக்கக் குறியீடுகளின் பொருளை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்[தொகு]

ஆங்கில மொழியில் ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் சுருக்கக் குறியீடு பலமுறைகளில் வகுப்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்து அல்லது நடு எழுத்துக்களைக் கொண்டு சுருக்கக் குறியீடுகளை உருவாக்குவர்.

எடுத்துக்காட்டு வகை சுருக்க வடிவம் ஆதாரம்
Doctor சுருக்கம் Dr D——r
Professor சுருக்கக் குறியீடு Prof. Prof...
Reverend சுருக்கக் குறியீடு Rev. Rev...
Reverend சுருக்கம் Revd Rev——d
Right Honourable சுருக்கக் குறியீடு & சுருக்கம் Rt Hon. R——t Hon...

பயன்கள்[தொகு]

அன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கில மொழியின் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்குரிய சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்துவதால் படிக்கும் நேரமும், நூலில் இடமும் குறைகிறது.[4]

வரலாறு[தொகு]

நவீன ஆங்கில மொழி வளர்ச்சியின் போது, கிபி 15 - 17ம் நூற்றாண்டுகளில் சுருக்கக் குறியீடுகள் தோன்றியது.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃகுப்பெயர்&oldid=3790264" இருந்து மீள்விக்கப்பட்டது