ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு
16 மார்ச் 2011 அன்று நான்கு சேதமடைந்த அணு கட்டிடங்களின் படம். வலமிருந்து: யூனிட் 1,2,3,4. அலகு நீராவி / "நீராவி" தெளிவாக புலப்படும் 2 இன்ச் சுவர், ஒரு வென்ட் இதே போன்ற வெடிப்பு தடுக்கும் ஹைட்ரஜன் காற்று வெடிப்புகள்
16 மார்ச் 2011 அன்று நான்கு சேதமடைந்த அணு கட்டிடங்களின் படம். வலமிருந்து: யூனிட் 1,2,3,4. அலகு நீராவி / "நீராவி" தெளிவாக புலப்படும் 2 இன்ச் சுவர், ஒரு வென்ட் இதே போன்ற வெடிப்பு தடுக்கும் ஹைட்ரஜன் காற்று வெடிப்புகள்
நிகழிடம் ஒகுமா, ஃபுகுசிமா, ஜப்பான்
Coordinates 37°25′17″N 141°1′57″E / 37.42139°N 141.03250°E / 37.42139; 141.03250
Outcome INES நிலை 7 (பெரு விபத்து)[1][2]
காயப்பட்டோர் 37 பேர்

ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு என்பது ஜப்பான் கடல் பகுதியில் 11 மார்ச் 2011 அன்று ஏற்பட்ட சுனாமியால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதைக் குறிக்கும். இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கூறினர்.

விபத்து[தொகு]

இந்த உலை சுனாமியால் பாதிக்கப்பட்ட போது, தொழிலாளர் சம்பளம் 20 சதவீதம் தரப்படவில்லை, 1,800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1,973 பேருக்கு தைராய்டு கதிர்வீச்சின் விளைவாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

மீட்பு நடவடிக்கை[தொகு]

உலக அணுசக்தி வரலாற்றிலேயே இதுவரை செய்யப்படாத ஒரு மீட்புப் பணி, ஜப்பானில் சிதைந்து கிடக்கும் ஃபுகுஷிமா அணு உலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அணு உலை வளாகத்தில் நான்காம் உலையில் எரிபொருள் குச்சிகள் இன்னமும் மேற்கூரை இல்லாமல், செயல்படும் படி உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நீரை விட்டு வெளியே குச்சிகள் எடுக்கப்பட்டால் காற்றில் பட்டதும் தீப்பிடிக்கக் கூடியவை, இது பெரும் கதிர்வீச்சை சீனா முதல் மேற்கு அமெரிக்கா வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 15 அடி நீளத்தில், 30 கிலோ எடை கொண்ட 1,331 குச்சிகள் இங்கு தண்ணீருக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலையின் உரிமையாளர்கள் ‘டெப்கோ’ என்ற நிறுவனத்தினராவர் நவம்பர் மாதம் மீட்பு பணியை செய்ய உள்ளனர்.

1975 ல் நிலையத்தின் வான்வழி காட்சியில் 4வது அணு உலையின் தோற்றம்/1979ல் 6வது உலையின் வேலை நடக்கும் காட்சி

அணு உலை வளாகத்தை சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் ஆகும். இதற்கான செலவு 11 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். [3]

மேற்கோள்[தொகு]