உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:புக்குசிமா அணுவுலைப் பேரழிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு வேண்டுகோள்: ஃபுகுசிமா அணு உலை என்ற கிரந்தம் நீக்கி, பெயரிட வேண்டுகிறேன். தமிழால் செய்திகளை எழுது முடியும் என்பது எனது எண்ணம் என்பதால், இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழ் என்பதை ஆங்கிலேயர்கள் 'டமில் (Tamil)' என்று அவர்கள் மொழிக்கேற்ப கூறுவது போல, நாம் ஃபுகுசிமா என்று கூறுவது தவறல்ல என்று எண்ணுகிறேன். வேகமாக சொல்லும் போது, மூல ஒலியை ஓரளவு ஒத்தே வரும் என்று எண்ணுகிறேன். மற்றபடி உங்களின் எண்ணம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 06:38, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆய்த எழுத்து சொல்லின் முன் வருதலும் கூடாது. பார்க்க: பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் --Anton·٠•●♥Talk♥●•٠· 06:40, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி.ஆன்டன். உங்களிடமும் ஒரு முன்மொழிவை வைக்க விரும்புகிறேன். நாம் விக்கிநடையை புரிந்தவர்கள். ஆனால், பங்களிப்பாளர்கள் வேறுபட்டதிறன் உடையவர்கள். யாருக்கும் ஒரு அணுகுமுறை முதலில் புரியாமல் இருக்கலாம். எனவே, தலைப்பு மாற்றத்தின் தேவையை, உறுதியை எடுத்துக்கூறுவது நமது கடமையாக இருக்க வேண்டும். அவரே மாற்றினால், அது நன்றாக இருக்கும். பல்வேறு பயனர்களிடம் உரையாடிய போது, இது தெரிந்தது. நீங்கள் தலைப்பு மாற்றியது தவறு எனக் கூறுவில்லை. பல்வேறு பட்ட நபர்களை அரவணைத்து போக வேண்டியது நமது கடமை என்றே நான் எண்ணுகிறேன். தொடர்ந்து அவர்கள் தங்கள் பங்களிப்புகளை செய்ய, இது ஒரு தூண்டு கோல் ஆகும். எனவே, அடுத்த முறை இது போல் உடன் மாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அறிவித்த பிறகு மாற்றுவதால், நமது விரிவாக்கத்திற்கு வழிகள் ஏற்படும் என்று கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 06:51, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் ஆன்டன், தவறுதலாக நீங்கள் மாற்றியதாக எண்ணிவிட்டேன்.இனி, கவனமாக என் எண்ணங்களைக் கூறுகிறேன்--≈ உழவன் ( கூறுக ) 06:53, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும். இதைச் செய்தது நான். இனி பொறுத்துச் செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:55, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தயவுசெய்து மன்னிக்கவும் என்றெல்லாம் கூறவேண்டும். அது எனது பிழை என்பாதல், மன்னிப்பு கேட்டேன். நீங்கள் சரியாகத்தான் செய்தீர்கள். ஆனால், எனக்கு கிரந்தம் இருக்கக்கூடாது என்பது மட்டுமே எனது வேண்டுகோள். ஆன்டன் கூறுவது போல, ஆய்தவெழுத்து பற்றிய ஆழ்மையான அறிவு இல்லை. --≈ உழவன் ( கூறுக ) 07:00, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆயுத எழுத்தை ஆரம்பத்தில் தவிர்ப்பது நல்லது: புக்குசிமா அணுவுலைப் பேரழிவு என்பது எனது பரிந்துரை. (புகுசிமா இடையில் க் மிகுவதும் சிறப்பு).--Kanags \உரையாடுக 07:13, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. கனகு! தமிழ் இலக்கணப்படி சற்று விளக்கினால், நன்றாக இருக்கும். அடுத்த முறை பதிவு செய்யும் போது, உள்மனம் கூறுமல்லவா?--≈ உழவன் ( கூறுக ) 07:16, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]