பாகல் இலைக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
15 இலிருந்து 5 வரை ஊடுபுள்ளிகள், புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுகளாலும் இணைப்பு

பாகல் இலைக் கோலம் பாகற்கொடியின் இலைகளை ஒத்த வடிவங்களைக் கொண்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். அருகில் உள்ள படம் 15 புள்ளிகளில் தொடங்கி, ஊடுபுள்ளிகளாக ஒன்றுவரை புள்ளிகள் இட்டு வரையப்பட்ட கோலம் ஒன்றைக் காட்டுகிறது. புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுகளாலும் இணைக்கப்படுகின்றன.

அடிப்படை அலகு[தொகு]

இக் கோல வடிவத்தின் அடிப்படை அலகு, ஒன்பது புள்ளிகளுடன் தொடங்கி வரையப்படக்கூடியது. ஒரு அலகில், ஆறு இலைகள் ஒரு வளையம் போல் இணைந்த அமைப்பு உள்ளது. இவ்வளையத்தின் நடுவில் ஒரு நட்சத்திர வடிவம் உள்ளது. மையத்தில் உள்ள தனிப் புள்ளியைச் சுற்றி ஒரு சிறு வட்டம் வரையப்படும்.

நான்கு அலகுகள்[தொகு]

இங்கே காட்டப்பட்டுள்ள கோலம் இத்தகைய நான்கு அலகுகள் இணைந்த வடிவமாகும். மேலும் அலகுகளை இணைப்பதன்மூலம் இதனை வளர்த்துச் செல்ல முடியும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்_இலைக்_கோலம்&oldid=3446215" இலிருந்து மீள்விக்கப்பட்டது