உள்ளடக்கத்துக்குச் செல்

கோரல்டிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரல்டிரா
உருவாக்குனர்கோரல்
அண்மை வெளியீடுX6 / மார்ச்சு 20 2012 (2012-03-20); 4634 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைVector graphics editor
உரிமம்தனியுரிம மென்பொருள்
இணையத்தளம்http://www.corel.com

கணினி வரைகலையில் வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள்களுள் ஒன்று கோரல்டிரா என்பதாகும். 1989 முதல் கனடா நாட்டின் கோரல் காப்பரேஷன் என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்கி வருகிறது. கோரல்டிரா 1.0 என்று வெளியான இதன் 16 வது பதிப்பு தற்போது கோரல்டிரா எக்ஸ்6 என்ற பெயரில் கிடைக்கிறது.

வெக்டார் வகைப் படங்கள்

[தொகு]

கணினி வரைகலையில் இரண்டு வகையான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிக்ஸல் எனப்படும் மிகச் சிறிய கட்டங்களின் அடிப்படையிலான படங்கள் ராஸ்டர் வகையைச் சார்ந்தவையாகும். அளவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுபவையே வெக்டார் வகைப் படங்களாகும். இவற்றை எந்த அளவில் வேண்டுமானாலும் உருவாக்கி, அதனைத் தேவையான அளவிற்கு அளவில் மாற்றம் செய்து கொள்ளலாம். படத்தின் தரம் சேதமுறுவது கிடையாது.

இப்படிப்பட்ட வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே கோரல்டிரா மென்பொருள் உதவுகிறது. படங்கள் மட்டுமல்லாது, பக்க வடிவைமப்பு, புத்தக வேலைகளுக்கும்கூட பயன்படுத்தப்படுகிறது.

கருவிகளும் கட்டளைகளும்

[தொகு]

கோடுகள் வரைவதிலிருந்து வண்ணங்கள் தீட்டுவது வரையிலும் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்ற சுமார் 19 கருவிகள் நேரடியாக பயன்படும் விதமாகவும், அவற்றிற்குள் மேலும் பல துணைக்கருவிகள் மறைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவிகளுள் ஷேப் டூல் என்பது பெரிய அளவிலான செயல்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளதாகும்.

கருவிகள் தவிர படங்கள் வரைவதற்கு உதவுகின்ற பல்வேறுவிதமான கட்டளைகள் 12 மெனுக்களுக்குள் பட்டியலாகத் தரப்படுகின்றன. ஃபைல் முதல் ஹெல்ப் வரையிலான இந்த மெனுக்களில் ஒவ்வொன்றும் தனித்தனியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்தக் கட்டளைகளுள் டூல்ஸ் மெனுவிற்குள் தரப்பட்டுள்ள, ரன் ஸ்கிரிப்ட், மேக்ரோஸ் போன்றவற்றை பயன்படுத்த சிறிது கணினி தொழில்நுட்ப அறிவும் தேவையாக உள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் காரணமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் கோரல்டிராவின் புதிய பதிப்புகள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் புதிய கருவிகளும் கட்டளைகளும் கிடைக்கின்றன.

கோரலின் பிற தயாரிப்புகள்

[தொகு]

கோரல்டிரா பொதுவாக வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே சிறப்பு வாய்ந்த மென்பொருளாகும். எனினும் சமீப காலமாக, ராஸ்டர் வகைப் படத்தை உருவாக்குவதற்காகத் தனியே கோரல் போட்டோ-பெயின்ட் என்ற மென்பொருளும் தரப்படுகிறது.

கணினித் திரையில் தெரியும் காட்சியைப் படம் பிடிப்பதற்காக கோரல் கேப்சர் என்ற தனியான மென்பொருளும் இந்தத் தொகுப்பில் கிடைக்கிறது. இதனால் துல்லியமான, தரமான முறையில் கணினித் திரைக் காட்சியை பெற முடிகிறது.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரல்டிரா&oldid=3242306" இலிருந்து மீள்விக்கப்பட்டது