சூரியக் குறுணை
வார்ப்புரு:Structure of the Sun
சூரியக் குறுணை (solar granule) என்பது சூரியனின் ஒளிக்கோளத்தில் உள்ள ஒரு வெப்பச்சுழற்சிக் கண்ணறையாகும் . அவை சூரியனின் வெப்பச் சுழற்சி மண்டலத்தில் உள்ள மின்ம ஊடைகளால் ஒளிக்கோளத்துக்கு நேரடியாகக் கீழே ஏற்படுகின்றன. சூரிய ஒளிக்கோளத்தின் குறுணைத் தோற்றம் இந்த வெப்பச் சுழற்சிக் கண்ணறைகளின் உச்சியில் இருந்து உருவாகிறது. இந்த நிகழ்வு குறுணையாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
குறுணைகளின் எழுச்சிப் பகுதி வெப்ப மின்ம அகட்டில் அமைந்துள்ளது. குளிர்ந்த இறங்கு மின்மத்தால் குறுணைகளின் வெளிப்புற விளிம்பு இருண்டதாக உள்ளது. ( இருண்ட, குளிரான மின்மம் எனும் சொல் பொலிந்த, வெப்பமான மின்மத்துடன் ஒப்பிடும் எதிர்சொல்லாகும். ஸ்டீபன்-போல்ட்ஸ்மேன் விதிப்படி, வெப்பநிலை நாற்படியில் உயர்வதால் ஒளிர்வு அதிகரிக்கிறது, இது ஒரு சிறிய வெப்ப இழப்பிற்கு கூட பெரிய ஒளிர்வு மாறுபாட்டை உருவாக்குகிறது.) கூடுதலாக கட்புலத் தோற்றம் வெப்பச்சுழற்சி இயக்கத்தால் விளக்கப்படும். தனிப்பட்ட குறுணைகளிலிருந்துள்ள ஒளியின் டாப்ளர் பெயர்ச்சி அளவீடுகள் அவற்றின் வெப்பச் சுழற்சிக்கான சான்றுகளை வழங்குகின்றன.
ஒரு பொதுவான சூரியக் குறுணை 1,500 கிலோமீட்டர்கள் (930 mi) வரையில் விட்டம் கொண்டது இது சிதையும் முன் 8 முதல் 20 மணித்துளிகள் வரை நீடிக்கும். [1] [2] எந்த நேரத்திலும், சூரியனின் மேற்பரப்பு சுமார் 4 மில்லியன் குறுணைகளால் மூடப்பட்டிருக்கும். ஒளிக்கோளத்தின் கீழே 30,000 கிலோமீட்டர்கள் (19,000 mi) வரையிலான விட்ட " மீக்குறுணைகளின் " அடுக்கு உள்ளது. இந்த விட்டம் 24 மணிநேரம் வரை ஆயுட்காலம் கொண்டது.
காட்சிமேடை
[தொகு]-
சுவீடிய வெற்றிடச் சூரியத் தொலைநோக்கி நோக்கிய சூரிய மேற்பரப்புக் குறுணைகளின் இயக்கம்
-
சூரிய மேற்பரப்பு சுற்றி சூரியக் கரும்புள்ளியின் விரிவான காட்சி. சூரியக் கரும்புள்ளியைச் சாராத அடர்ந்த கண்னறைகளின் வடிவமே குறுணையாக்கம் ஆகும்; தனிக் கண்ணறைகளே குறுணைகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bahng, J.; Schwarzschild, M. (September 1961). "Lifetime of Solar Granules". The Astrophysical Journal 134: 312. doi:10.1086/147160. Bibcode: 1961ApJ...134..312B. https://archive.org/details/sim_astrophysical-journal_1961-09_134_2/page/312.
- ↑ Bahng, J.; Schwarzschild, M. (September 1961). "Lifetime of Solar Granules". The Astrophysical Journal 134: 312. doi:10.1086/147160. Bibcode: 1961ApJ...134..312B. https://archive.org/details/sim_astrophysical-journal_1961-09_134_2/page/312.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் சூரியக் குறுணை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.