உள்ளடக்கத்துக்குச் செல்

அகந்தா சீனிவாசு மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். அகந்தா சீனிவாசு மூர்த்தி
R. Akhanda Srinivas Murthy
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2013–2023
முன்னையவர்பி. பிரசன்ன குமார்
பின்னவர்ஏ.சி.சீனிவாசு
தொகுதிபுலகேசிநகரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2018-2023)
பிற அரசியல்
தொடர்புகள்
சமயச்சார்பற்ற சனதா தள கட்சி (2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை)

ஆர். அகந்தா சீனிவாசு மூர்த்தி (R. Akhanda Srinivas Murthy) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதியும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு புலகேசிநகரா என்ற கர்நாடகா மாநில சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் முன்னதாக 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் உறுப்பினராகவும் தொகுதியின் பிரதிநிதியாகவும் இருந்தார். [2] அதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர பதவி விலகினார். [3] மேலும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [4]

2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில், மூர்த்தியின் மருமகனால் பகிரப்பட்டதாகக் கூறப்படும் முகம்மது நபி பற்றிய ஒரு எரிச்சலூட்டும் முகநூல் இடுகையால் தூண்டப்பட்ட ஒரு வன்முறைக் கலவரம் பெங்களூர் நகரில் வெடித்தது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதியன்று, மூர்த்தி 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதால் புலகேசிநகரா தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.[5] [6] [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Devaiah, Darshan (2019-01-06). "So near to Soudha, yet so far from facilities".
  2. "14 Assembly Members List".
  3. "Seven rebel JD(S) MLAs join Congress in presence of Rahul Gandhi in Karnataka". 2018-03-25.
  4. "Pulakeshinagar Cong candidate wins by highest margin". 2018-05-16.
  5. "Karnataka polls: Name not in candidate lists, Congress's Akhanda Srinivas Murthy quits as MLA".
  6. "Karnataka assembly elections: Congress MLA Akhanda Srinivas Murthy resigns". 2023-04-17. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-assembly-elections-congress-mla-akhanda-srinivas-murthy-resigns/articleshow/99544914.cms. 
  7. "Karnataka Polls: Akhanda Srinivas Murthy resigns as Congress MLA". 2023-04-17.