ஏ. வெங்கடேசு நாயக்கு
ஏ. வெங்கடேசு நாயக்கு A. Venkatesh Naik | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், கருநாடகம் | |
பதவியில் 13 மே 2013 – 24 ஆகத்து 2015 | |
முன்னையவர் | கே. சிவானந்தா கௌடா நாயக்கு |
தொகுதி | தேவதுர்கா |
இந்தியர் நாடாளுமன்றம் for இராய்ச்சூர் | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | ஆர். அம்பண்ணா நாயக்கு தோர் |
பின்னவர் | இராசா ரங்கப்பா நாயக்கு |
பதவியில் 1998–2009 | |
முன்னையவர் | இராசா ரங்கப்பா நாயக்கு |
பின்னவர் | சன்னா பக்ரியப்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ராய்ச்சூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 6 சூன் 1936
இறப்பு | 24 ஆகத்து 2015 அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 79)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1968–2015) |
துணைவர் | சாவித்ரி (1964–2015) |
பிள்ளைகள் | 5 |
ஏ. வெங்கடேசு நாயக்கு (A. Venkatesh Nayak) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இவர் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 10ஆவது மக்களவைக்கு வெங்கடேசு நாயக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தேவதுர்கா தொகுதியில் போட்டியிட்டு ஓர் இடத்தைப் பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த இரயில் விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இறந்த ஐந்து பேரில் வெங்கடேசு நாயக்கும் ஒருவராவர்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Buradikatti, Kumar (24 August 2015). "Devadurga MLA Venkatesh Naik dies in rail accident". The Hindu. http://www.thehindu.com/news/national/karnataka/devadurga-mla-venkatesh-naik-dies-in-rail-accident/article7574569.ece.
- ↑ Janyala, Sreenivas (24 August 2015). "Karnataka Congress MLA among five killed after truck collides with Bangalore-Nanded Express". The Indian Express. http://indianexpress.com/article/india/india-others/karnataka-mla-among-six-killed-after-truck-collides-with-nanded-express/.