அரை-முழுவெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், அரை-முழுவெண் (half-integer) என்பது பின்வரும் வடிவிலமைந்த ஒரு எண்:

(இங்கு ஒரு பூச்சியமில்லா முழு எண்)

எடுத்துக்காட்டு:

ஒரு முழுவெண்ணை இரண்டால் வகுக்கக் கிடைப்பது எப்பொழுதும் அரை-முழுவெண்ணால இருப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். ஒற்றை முழுவெண்களை இரண்டால் வகுக்கும்போது மட்டுமே அரை-முழுவெண்கள் கிடைக்கும். இக்காரணத்தினால் சில சமயங்களில் அரை-முழுவெண்கள், "அரை-ஒற்றை முழுவெண்கள்" என அழைக்கப்படுகின்றன. ஒரு முழுவெண்ணை இரண்டின் அடுக்குகளால் வகுக்கக் கிடைக்கும் எண்களின் (இருபடி விகிதமுறுஎண்) கணத்தின் உட்கணமாக அரை முழுவெண்கள் அமைகின்றன.[1]

குறியீடும் இயற்கணித அமைப்பும்[தொகு]

அரை-முழுவெண்களின் கணக் குறியீடு:

முழுவெண்களும் அரை-முழுவெண்களும் சேர்ந்து கூட்டல் செயலியின்கீழ் ஒரு குலமாகும். இக்குலத்தின் குறியீடு:[2]

எனினும் இவ்விரு எண்களும் வளையமாக இருக்காது. ஏனெனில் இரு அரை-முழுவெண்களின் பெருக்குத்தொகை மீண்டுமொரு அரை-முழுவெண்ணல்ல. எடுத்துக்காட்டாக [3] இவ்வெண்களை உள்ளடக்கிய மிகச்சிறிய உள்வளையம், இருபடி விகிதமுறு எண்களின் வளையம் () ஆகும்.

பண்புகள்[தொகு]

  • ஒரு ஒற்றையெண்ணாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" அரை-முழுவெண்களின் கூட்டுத்தொகையும் ஒரு அரை-முழுவெண்ணாக இருக்கும். உம் இதில் அடங்கும்.
  • ஒரு அரை-முழுவெண்ணின் எதிரெண்ணும் ஒரு அரை-முழுவெண்ணாகும்.
  • முழுவெண்கள் கணத்திலிருந்து அரை-முழுவெண்கள் கணத்திற்கு , ( ஒரு முழுவெண்) என்ற இருவழிக்கோப்பு அமையுமென்பதால், அரை-முழுவெண்கள் கணத்தின் எண்ணளவை, முழுவெண்கள் கணத்தின் எண்ணளவைக்குச் சமமாகும்.

பயன்பாடு[தொகு]

தொடர் பெருக்கச் சார்பானது முழுவெண்கள் தருமதிப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டாலும் அதனை காமா சார்பைப் பயன்படுத்திப் பின்னவடிவத் தருமதிப்புகளுக்கும் நீட்டிக்கலாம். ஆரமுள்ள n-பரிமாணப் பந்தின் கனவளவின் வாய்பாட்டில் காமா சார்பு முக்கிய பங்கு வகிக்கிறது:[4]

அரை-முழுவெண்களின் காமா சார்பானது, -இன் வர்க்கமூலத்தின் முழுவெண் மடங்குகளாக இருக்கும்:

( என்பது இரட்டைத் தொடர் பெருக்கத்தைக் குறிக்கிறது)

மேற்கோள்கள்[தொகு]

  1. Sabin, Malcolm (2010). Analysis and Design of Univariate Subdivision Schemes. Geometry and Computing. Vol. 6. Springer. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642136481.
  2. Turaev, Vladimir G. (2010). Quantum Invariants of Knots and 3-Manifolds. De Gruyter Studies in Mathematics. Vol. 18 (2nd ed.). Walter de Gruyter. p. 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110221848.
  3. Boolos, George; Burgess, John P.; Jeffrey, Richard C. (2002). Computability and Logic. Cambridge University Press. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521007580.
  4. "Equation 5.19.4". NIST Digital Library of Mathematical Functions. U.S. National Institute of Standards and Technology. 2013-05-06. Release 1.0.6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரை-முழுவெண்&oldid=3831514" இலிருந்து மீள்விக்கப்பட்டது