தசுனீம் பானோ
தசுனீம் பானோ | |
---|---|
மாநகரத் தந்தை மைசூர் மாநகராட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர் | செய்யது சைமியுள்ளா |
பெற்றோர் | முனவர் பாட்சா (தந்தை) தசீம்பானு (தாய்) |
தசுனீம் பானோ (Tasneem Bano) இந்தியாவில் கருநாடக மாநிலத்தின் மைசூர் மாநகராட்சியின் 158ஆம் ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் மாநகரத் தந்தை ஆவார். [1] இவர் ஜனதா தளத்தினை (மதச்சார்பற்ற) சார்ந்த அரசியல்வாதி ஆவார்.[2][3][4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]
முனவர் பாட்சா (தையல்காரர்) மற்றும் தசீன் பானு (வீட்டு வேலை செய்பவர்) ஆகியோருக்கு பானோ மகளாகப் பிறந்தார்.[5] மைசூரில் உள்ள மகாராணி கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
பானோ, சையத் சமியுல்லாவை மணந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] இவரது மாமா அல்ஹாஜ் நசீருதீன் பாபு மைசூரில் மூன்று முறை மாநகர உறுப்பினராக இருந்தார்.[6]
அரசியல் வாழ்க்கை[தொகு]
பானோ இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து அரசியல்வாதியாக அரசியல் வாழ்க்கையினை தொடங்கி, மார்ச் 2013-ல் 26-பகுதி மீனா சந்தையின் உறுப்பினரானார். இந்த பகுதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 2018-ல் பானோ, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளித்தார். காங்கிரசு-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி வேட்பாளராக பானோ அறிவிக்கப்பட்டார்.[7] பானோ 18 சனவரி 2020 அன்று மைசூர் மாநகரத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.[8] மேலும் மைசூருவின் 22வது மாநகரத்தந்தை ஆனார்.[6] மாநகரத்தந்தை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கீதா யோகானந்தை தோற்கடித்தார். மத்திய அமைச்சகம் நாட்டில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019-ஐ அமல்படுத்த முயன்ற நேரத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது.
சர்ச்சைகள்[தொகு]
பானோ, துணை ஆணையர் ரோகினி சிந்துரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா ஆகியோருடன் வெளிப்படையாகச் சர்ச்சைகளில் ஈடுபட்டார்.[9][10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Meet Tasneem, the first Muslim woman mayor of Mysuru". The Indian Express (in ஆங்கிலம்). 2020-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "Tasneem of JD(S) elected Mayor of Mysuru" (in en-IN). 2020-01-18. https://www.thehindu.com/news/national/karnataka/tasneem-of-jds-elected-mayor-of-mysuru/article30595976.ece.
- ↑ Dubey, Vipashyana (2020-01-23). "Meet Tasneem Bano, Mysuru's First Muslim Woman Mayor". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "Help Mysuru bag five-star status in garbage-free cities category again: Mayor | Mysuru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jan 23, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "In Tasneem, Mysuru Gets Its First Ever Muslim Woman Mayor". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
- ↑ 6.0 6.1 6.2 "Mysuru gets first Muslim woman Mayor". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ Athavale, Sanika (2020-01-21). "Tasneem Banu Becomes Mysuru's First Muslim Woman Mayor". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "Tasneem Bano elected as first Muslim woman mayor of Mysuru: 31-year-old JD(S) corporator wants to retain 'clean city' tag - Politics News, Firstpost". Firstpost. 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "MCC Commissioner not taking us into confidence: Mayor Tasneem Bano – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ "People are trying to take me for granted: Mayor Tasneem Bano – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.