தசுனீம் பானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசுனீம் பானோ
மாநகரத் தந்தை மைசூர் மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
துணைவர்செய்யது சைமியுள்ளா
பெற்றோர்முனவர் பாட்சா (தந்தை) தசீம்பானு (தாய்)

தசுனீம் பானோ (Tasneem Bano) இந்தியாவில் கருநாடக மாநிலத்தின் மைசூர் மாநகராட்சியின் 158ஆம் ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் மாநகரத் தந்தை ஆவார். [1] இவர் ஜனதா தளத்தினை (மதச்சார்பற்ற) சார்ந்த அரசியல்வாதி ஆவார்.[2][3][4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

முனவர் பாட்சா (தையல்காரர்) மற்றும் தசீன் பானு (வீட்டு வேலை செய்பவர்) ஆகியோருக்கு பானோ மகளாகப் பிறந்தார்.[5] மைசூரில் உள்ள மகாராணி கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பானோ, சையத் சமியுல்லாவை மணந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] இவரது மாமா அல்ஹாஜ் நசீருதீன் பாபு மைசூரில் மூன்று முறை மாநகர உறுப்பினராக இருந்தார்.[6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பானோ இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து அரசியல்வாதியாக அரசியல் வாழ்க்கையினை தொடங்கி, மார்ச் 2013-ல் 26-பகுதி மீனா சந்தையின் உறுப்பினரானார். இந்த பகுதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 2018-ல் பானோ, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளித்தார். காங்கிரசு-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி வேட்பாளராக பானோ அறிவிக்கப்பட்டார்.[7] பானோ 18 சனவரி 2020 அன்று மைசூர் மாநகரத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.[8] மேலும் மைசூருவின் 22வது மாநகரத்தந்தை ஆனார்.[6] மாநகரத்தந்தை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கீதா யோகானந்தை தோற்கடித்தார். மத்திய அமைச்சகம் நாட்டில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019-ஐ அமல்படுத்த முயன்ற நேரத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது.

சர்ச்சைகள்[தொகு]

பானோ, துணை ஆணையர் ரோகினி சிந்துரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா ஆகியோருடன் வெளிப்படையாகச் சர்ச்சைகளில் ஈடுபட்டார்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Meet Tasneem, the first Muslim woman mayor of Mysuru". The Indian Express (in ஆங்கிலம்). 2020-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  2. "Tasneem of JD(S) elected Mayor of Mysuru" (in en-IN). 2020-01-18. https://www.thehindu.com/news/national/karnataka/tasneem-of-jds-elected-mayor-of-mysuru/article30595976.ece. 
  3. Dubey, Vipashyana (2020-01-23). "Meet Tasneem Bano, Mysuru's First Muslim Woman Mayor". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  4. "Help Mysuru bag five-star status in garbage-free cities category again: Mayor | Mysuru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jan 23, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  5. "In Tasneem, Mysuru Gets Its First Ever Muslim Woman Mayor". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  6. 6.0 6.1 6.2 "Mysuru gets first Muslim woman Mayor". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  7. Athavale, Sanika (2020-01-21). "Tasneem Banu Becomes Mysuru's First Muslim Woman Mayor". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  8. "Tasneem Bano elected as first Muslim woman mayor of Mysuru: 31-year-old JD(S) corporator wants to retain 'clean city' tag - Politics News, Firstpost". Firstpost. 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  9. "MCC Commissioner not taking us into confidence: Mayor Tasneem Bano – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  10. "People are trying to take me for granted: Mayor Tasneem Bano – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுனீம்_பானோ&oldid=3696336" இலிருந்து மீள்விக்கப்பட்டது