புவனேசுவரி மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவனேசுவரி மிசுரா
இயற்பெயர்ଭୁବନେଶ୍ୱରୀ ମିଶ୍ର
இயற்பெயர்புவனேசுவரி மிசுரா
பிறப்பு(1950-01-25)25 சனவரி 1950
ஒடிசா, இந்தியா
இறப்பு19 பெப்ரவரி 2016(2016-02-19) (அகவை 66)
புது தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்ஒடிய இசை
தொழில்(கள்)ஒடிய இசைப் பாடகி

புவனேசுவரி மிசுரா (Bhubaneswari Mishra) (25 ஜனவரி 1950 - 19 பிப்ரவரி 2016) பாரம்பரிய ஒடிய இசைப்பாடகியும், பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் ஆதிகுரு சிங்காரி சியாம் சுந்தர் கர்ரின் சீடர் ஆவார். புரி நகரத்தின் பிரபலமான மருத்துவரும் கவிஞருமான ஜக்மோகன் மிசுராவை மணந்தார். இவரது மகள் கஸ்தூரிகா மிசுராவும் பயிற்சி பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.

கிருஷ்ண சுதாமா படத்திற்காக திக்கி மோரா நா என்ற பாடலை பாடியதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சகி கோபிநாத் திரைப்படத்தில் இடிகிலி மிதிகிலி, பெலாபூமியில் ஜஹ்னா ரா சிந்துரா காரா, மற்றும் மா மங்களாவில் தயாமாயீ மஹாமாயீ மா மங்களா உள்ளிட்ட பல பின்னணிப் பாடல்களை படங்களுக்கு வழங்கியுள்ளார். [1]

1979 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் முறையே ஸ்ரீகிருஷ்ண ராசலீலா மற்றும் ஜெய் மா மங்களா ஆகிய படங்களுக்காக ஒடிசா மாநில திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]

மே 2018 இல் திறக்கப்பட்ட புவனேசுவர மாநில அருங்காட்சியகத்தின் புதிய திரைப்படக் காட்சியகத்தில், மற்ற குறிப்பிடத்தக்க பின்னணிப் பாடகர்களான பிரபுல்லா கர் மற்றும் சிக்கந்தர் ஆலம் ஆகியோருடன் மிசுராவின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது. [3]

இறப்பு[தொகு]

இவர் 19 பிப்ரவரி 2016 அன்று புது தில்லியில் மாரடைப்பால் இறந்தார். [4] ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாய்க், இவரை "மிகவும் திறமையானவர்" [5] என்றும், இவரது மரணம் "இசை மற்றும் கலாச்சாரத் துறைக்கு பெரும் இழப்பு" என்றும் விவரித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Ayaskant (19 February 2016). "Eminent Odisha vocalist Bhubaneswari Mishra passes away | OdishaSunTimes.com" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  2. "Noted singer Bhubaneswari Mishra passes away". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  3. "Odisha Museum to have coin, film galleries". Odisha Sun Times (in அமெரிக்க ஆங்கிலம்). 16 May 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  4. "Noted singer Bhubaneswari Mishra passes away" (in en-IN). The Hindu. 2016-02-20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/noted-singer-bhubaneswari-mishra-passes-away/article8259252.ece. 
  5. "Singer Bhubaneswari Mishra passes away". India Today (in ஆங்கிலம்). 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேசுவரி_மிசுரா&oldid=3656413" இலிருந்து மீள்விக்கப்பட்டது