வானூர்தி எதிர்ப்புப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட வானூர்தி எதிர்ப்பு தொகுதி.

வானூர்தி எதிர்ப்புப் போர் (Anti-aircraft warfare) அல்லது வான் பாதுகாப்பு (Air defence) என்பது வான் போருக்கான போர்வெளி பதில் நடவடிக்கையாகும். இது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பினால் 'எதிரியின் வான் நடவடிக்கையின் செயல் திறனைக் குறைக்க அல்லது பயனற்றதாக்க வடிவமைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆகும்' என வரையறுக்கப்படுகிறது.[1] இதில் மேற்பரப்பு அடிப்படையிலான, நிலத்தடி (நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவுதல்), வான் சார்ந்த ஆயுத அமைப்புகள், தொடர்புபடுத்தப்பட்ட உணரி அமைப்புகள், கட்டளையும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் மற்றும் முனைப்பற்ற நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இது எந்த இடத்திலும் உள்ள கடல், தரை, வான் படைகளைப் பாதுகாக்க பயன்படுத்தப்படலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. AAP-6

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Air defense
என்பதில் ஊடகங்கள் உள்ளன.