பார்பரா நோஸ்கே
பார்பரா மிரியம் நோஸ்கே | |
---|---|
பிறப்பு | 6 செப்டம்பர் 1949 பஸ்ஸம், நெதர்லாந்து |
தேசியம் | நெதர்லாந்து |
துறை | மானிடவியல், சீரிய விலங்காராய்ச்சிக் கல்வி, மெய்யியல் |
பணியிடங்கள் | யார்க் பல்கலைக்கழகம்; சிட்னி பல்கலைக்கழகம் |
கல்வி | சமூக-கலாச்சார மானுடவியலில் முதுகலைப் பட்டம்; மெய்யியலில் முனைவர் பட்டம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | "விலங்குத் தொழிற்கூட்டு" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் |
பார்பரா மிரியம் நோஸ்கே (ஆங்கில மொழி: Barbara Noske) (பிறப்பு: செப்டம்பர் 6, 1949) ஒரு டச்சு கலாச்சார மானிடவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். அவர் விலங்குத் தொழிற்கூட்டு என்னும் சிந்தனையை அறிமுகப்படுத்தியவர்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]நோஸ்கே ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகத்தில் சமூக-கலாச்சார மானிடவியலில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டமும் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1990-களில் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் நோஸ்கே சுற்றுச்சூழல் நெறிமுறைகள், சூழலியல், சுற்றுச்சூழல் பெண்ணியம் ஆகியவற்றைக் கற்பித்தார். பின்னர் சிட்னி பல்கலைக்கழகத்தில் மானுடம் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சித் துறை நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றினார்.[4]
நோஸ்கே மனித–விலங்கு உறவில் நிபுணத்துவம் பெற்றவர். அறிவியல், நெறிமுறை மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மனித–விலங்கு உறவில் எங்கெங்கு பிளவுக் கோடுகள் உள்ளன என்பதை கண்டறிவதில் அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. அவரது ஆய்வுக் கட்டுரைகள் கருப்பொருளாக விளங்குபவை சீரிய விலங்காராய்ச்சிக் கல்வி மற்றும் ஆழ்சூழலியல்சார் சுற்றுச்சூழல் பெண்ணியம் ஆகிய துறைகளாகும். 1989-ஆம் ஆண்டு தனது ஹ்யூமன்ஸ் அண்டு அதர் அனிமல்ஸ் ("மனிதர்களும் பிற விலங்குகளும்") என்ற நூலில் "விலங்குகள் நம்மால் கணினிகள், இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன" என்று கூறி "விலங்குத் தொழிற்கூட்டு" என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.[1]
"மற்ற விலங்குகளுடனான மனித உறவுகள் பற்றிய அத்தியாவசியவாத முறைக்கு அப்பால் கேள்வி எழுப்பிய ஆரம்பகால பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவர் நோஸ்கே" என்று அன்னே ஸ்காட்டின் கூறுகிறார்.[5]
இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் செய்ன்ட் பால்ஸ் நகரில் வசிக்கிறார்.
நூல்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும்
[தொகு]- Huilen met de wolven: Een interdisciplinaire benadering van de mens-dier relatie (ஆய்வறிக்கை, 1988)
- Humans and Other Animals: Beyond the Boundaries of Anthropology (1989)[6]
- Beyond Boundaries: Humans and Animals (1997)[7]
- Al liftend: Uit het leven van een wereldreizigster (2000)
- Thumbing It: A Hitchhiker's Ride to Wisdom (2018)
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sorenson, John (2014). Critical Animal Studies: Thinking the Unthinkable. Toronto, Ontario, Canada: Canadian Scholars' Press. p. 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55130-563-9. பார்க்கப்பட்ட நாள் 7 October 2018.
- ↑ Alger, Kristy (23 September 2020). "Recognising the Animal Industrial Complex". Farm Transparency Project. https://www.farmtransparency.org/editorials/221-recognising-animal-industrial-complex. பார்த்த நாள்: 25 April 2022.
- ↑ Twine, Richard (2013). "Addressing the animal–industrial complex". In Corbey, Raymond; Lanjouw, Annette (eds.). The Politics of Species: Reshaping our Relationships with Other Animals. Cambridge: Cambridge University Press. pp. 77–92. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CBO9781139506755.009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139506755.
- ↑ "Abolitionist-Online - A Voice for Animal Rights". June 17, 2011. Archived from the original on 2011-06-17.
- ↑ Scott, Anne (2001). "Trafficking in monstrosity: Conceptualizations of 'nature' within feminist cyborg discourses". Feminist Theory 2 (3): 367–379. doi:10.1177/14647000122229587.
- ↑ Reviews for Humans and Other Animals:
- Wynne-Tyson, Jon (March 1990). "Short Takes -- Humans and Other Animals by Barbara Noske". The Animals' Agenda 10 (2): 53. https://www.proquest.com/docview/215893446/20AE9B386D484001PQ. பார்த்த நாள்: April 25, 2022.
- Birke, Lynda (May 13, 1989). "The great divide". New Scientist 122 (1664): 67. https://books.google.com/books?id=7TLJNYbd9JsC. பார்த்த நாள்: April 25, 2022.
- Lawrence, Elizabeth A. (1989). "Book Reviews: Humans and Other Animals". Anthrozoös 3 (2): 131-132. doi:10.2752/089279390787057676. https://www.tandfonline.com/doi/abs/10.2752/089279390787057676. பார்த்த நாள்: April 25, 2022.
- ↑ Reviews for Beyond Boundaries:
- Sanders, Clinton R.; Sax, Boria (September 1, 1998). "Book Reviews". Anthrozoös 11 (3): 179–181. doi:10.2752/089279398787000634. https://doi.org/10.2752/089279398787000634.
- Fox, Michael Allen (April 1998). "Barbara Noske, "Beyond Boundaries: Humans and Animals"". Philosophy in Review 18 (2): 104-107. https://journals.uvic.ca/index.php/pir/article/view/7846. பார்த்த நாள்: April 25, 2022.